முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டின் கேப்டனான அனிதா சம்பத்.. அதிருப்தியில் அர்ச்சனா?

Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டின் கேப்டனான அனிதா சம்பத்.. அதிருப்தியில் அர்ச்சனா?

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக அனிதா சம்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டிகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அர்ச்சனா, சுசித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சம்யுக்தா, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த வார நிலவரப்படி பிக்பாஸ் வீட்டில் 13 பேர் இருந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 64 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் வழக்கம் போல இந்த வாரம் சனி, ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக சென்றது.

சனிக்கிழமை பாலாஜி மீதான குறைகள் அனைத்தையும் கமல் சரியான முறையில் விளக்கினார். மேலும் கேப்டன் டாஸ்க்கில் நடைபெற்ற குழப்பம் குறித்து குறும்படம் போட்டு தெளிவுபடுத்தப்பட்டது. இதனால் ஆரி, ரியோ மீதான பாலாஜியின் சந்தேகப் பார்வை மற்றும் பொய் குற்றச்சாட்டுகள் தவுடு பொடியாகின. மேலும் சனம் உடனான விவாதத்தின் போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்தது குறித்து பேசிய கமல், இது வன்முறையின் ஆரம்பம் போல இருந்தது. இதனை வளரவிடக்கூடாது என கண்டித்தார். இதனையடுத்து பாலாஜி - சனத்திடம் மன்னிப்பு கேட்டார்.

சோம் - கேப்ரியல்லா, ரமேஷ் - நிஷா ஜோடி சேர்ந்து விளையாடுவது போல தெரிந்தததாக கண்டித்த கமல், இது தனி நபர் விளையாட்டு என்பதை நினைவூட்டினார். பின்னர் எலிமினேஷன் தொடங்கிய நிலையில் சனிக்கிழமை ஆரி, பாலாஜி, சோம் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலில் நிஷா, பின்னர் ஆஜித் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். சனம், அனிதா, ஷிவானி மீதமிருந்த நிலையில் யார் வெளியேறுவார் என்ற பரபரப்பு இருந்தது

இதில் யார் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கமல் சக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில் பெரும்பாலானவர்கள் சனம் காப்பாற்றப்படுவார் என்றே தெரிவித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சனம் வெளியேறுவதாக கமல் அறிவித்தார். இதனால் அனிதா, சனம் ஷெட்டியிடம் சென்று கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். ஆனால் சனம் கூலாக வெளியேற தயாரானார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த சனம் ஷெட்டியை, இந்த வீட்டில் சரியாக விளையாட்டை புரிந்து தன்னிச்சையாக விளையாடியது நீங்கள் ஒருவரே என்று கமல் பாராட்டினார் சனம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரொமோவில், இந்த வார கேப்டனை தேர்ந்தெடுக்க போட்டி நடைபெறுகிறது. வழக்கமாக கேப்டன் டாஸ்கில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே போட்டியிடுவார்கள். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

' isDesktop="true" id="377697" youtubeid="RmQ66yR4aVI" category="entertainment">

திரையில் சில புகைப்படங்கள் காட்டப்படும் என்றும் அதன் பின் அது பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என பிக் பாஸ் கூறுகிறார். இந்த டாஸ்க்கில் இறுதியாக நிஷா, அனிதா போட்டியிடும் நிலையில், அதில் அனிதா வெற்றி பெறுவது காட்டப்பட்டுள்ளது. அனிதா இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் என அறிவிக்கப்பட்டதும் அவரை மற்ற போட்டியாளர்கள் பாராட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேவேளையில் அர்ச்சனா அதிருப்தியில் இருப்பது போன்றும் தெரிகிறது. நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்க்கலாம். வீட்டின் தலைவரானதால் அனிதா இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Aari, Anchor Rio, Anitha sampath, Archana chandhoke, Archana zara, Bigg Boss Tamil 4, Sanam