முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Biggboss 4 Tamil | ’சனத்திற்கு, ஆரி பேவரிஸம்’ - கேள்விகளால் டார்கெட் செய்யும் அனிதா சம்பத்..

Biggboss 4 Tamil | ’சனத்திற்கு, ஆரி பேவரிஸம்’ - கேள்விகளால் டார்கெட் செய்யும் அனிதா சம்பத்..

ஆரி, அனிதா

ஆரி, அனிதா

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், அனிதா, நிஷா, ரம்யா, சனம் மற்றும் ஷிவானி ஆகிய 7 பேர் உள்ளனர். இவர்களுக்கு வாக்கு அளிக்கும் நடைமுறையானது இன்றும் நிறைவடைய இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கியநிலையில் தற்போது வெற்றிகரமாக 61 நாட்களை கடந்துள்ளது. இதுவரை ரேகா, சுரேஷ், வேல்முருகன், சுஜித்ரா மற்றும் சம்யுக்தா ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது ரியோ, நிஷா, அர்ச்சனா, சோம், ரமேஷ், கேபி, ஆஜித், ஷிவானி, பாலாஜி, ரம்யா, சனம், அனிதா மற்றும் ஆரி ஆகிய 13 பேர் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம், அந்த வகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டது.

இந்த டாஸ்க் ஒருவழியாக நேற்று நிறைவடைந்த நிலையில் சரியாக விளையாடியவர்களை ஒன்று முதல் 13 என்ற வரிசையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. முதலிடத்தை ஆரி பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை பிடிக்க சனம், அனிதா இடையே போட்டி நிலவியது. அப்போது சனத்திற்கு எதிராக பாலாஜி பேசியதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

அப்போது உன்னிடம் பேசுவதற்கு பதிலாக என்னை நானே செருப்பால் அடித்து கொள்ள வேண்டும் என “தன் காலில் இருந்த செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு பாலாஜி அந்த இடத்தை விட்டு சென்றார்”. இதனை பார்த்த சக ஹவுஸ் மேட்ஸ் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஒருவழியாக பிரச்னை முடிந்த நிலையில் முதலிடத்தில் ஆரி, அவரை தொடர்ந்து 2, 3ம் இடங்களில் முறையே சனம், பாலாஜி உள்ளனர்.

4-ஆம் இடத்தில் அர்ச்சனா, 5-ஆம் இடத்தில் ரியோ, 6-ஆம் இடத்தில் ஆஜித், 7-ஆம் இடத்தில் ரம்யா, 8-ஆம் இடத்தில் ரமேஷ், 9-ஆம் இடத்தில் சோம், 10-ஆம் இடம் காலியாக இருந்தது. 11-ஆம் இடத்தில் கேபி, 12-ஆம் இடத்தில் ஷிவானி மற்றும் 13-ஆம் இடத்தில் நிஷாவும் இருந்தனர். இரண்டாம் இடம் கிடைக்காததால் 10-ஆம் இடத்தில் நிற்க விரும்பும் இல்லை எனக்கூறி அனிதா தனியாக அமர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வர ஹவுஸ்மேட்கள் அனைவரும் கேக் கட்டிங் செய்து பாலாவை வாழ்த்தினர். மேலும் அந்த கேக்கில் கப் முக்கியம் குமாரு என எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் நேற்றைய பிரச்னை தொடர்வது காட்டப்பட்டுள்ளது. நேற்று இரண்டாம் இடத்திற்கு சனம் நிற்க ஆரி ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் சனத்திற்கு, ஆரி பேவரிஷம் செய்ததாக அனிதா குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து அனிதா, ஆரி மற்றும் பாலாஜி கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது சனம் ஒரு கால் மட்டும் தான் பேசிய நிலையில் அவருக்கு இரண்டாம் இடம் கொடுப்பது சரி அல்ல என்றார். அதற்கு ஆரி அது உங்கள் கருத்து, எனக்கு சனம் 2ம் இடத்திற்கு தகுதியானவர் என தோன்றியதால் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன் என கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதனிடையே இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், அனிதா, நிஷா, ரம்யா, சனம் மற்றும் ஷிவானி ஆகிய 7 பேர் உள்ளனர். இவர்களுக்கு வாக்கு அளிக்கும் நடைமுறையானது இன்றும் நிறைவடைய இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

First published:

Tags: Actor Aari, Anitha sampath, Bigg Boss Tamil 4