முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss tamil : அன்றே கணித்தார் தாமரை.. நிரூப் - பிரியங்கா பிரண்ட்ஷிப் டிராமாக்கு ஒரு அளவே இல்லையா?

Bigg Boss tamil : அன்றே கணித்தார் தாமரை.. நிரூப் - பிரியங்கா பிரண்ட்ஷிப் டிராமாக்கு ஒரு அளவே இல்லையா?

Bigg Boss : அது எப்படி பெஸ்ட் பிரண்ட்ஸ் இவ்வளவு தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வார்கள்?

Bigg Boss : அது எப்படி பெஸ்ட் பிரண்ட்ஸ் இவ்வளவு தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வார்கள்?

Bigg Boss : அது எப்படி பெஸ்ட் பிரண்ட்ஸ் இவ்வளவு தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வார்கள்?

 • 2-MIN READ
 • Last Updated :

  பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் பிரியங்கா - நிரூப் சண்டையை பார்த்தவர்கள் வெறுத்து போய் மியூட் போட்டு இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வார வாரம் தலைவர் டாஸ்கின் போது நிரூப்பும் பிரியங்காவும் அடித்து கொள்வது தொடர் கதையாகி விட்டது. அது முடிந்த உடனே, இருவரும் உனக்காக நான் நிற்பேன், எனக்காக எப்பவும் பிரியங்கா வருவான்னு வெட்கமே இல்லாமல் இரண்டு பேரும் வாய்க்கு வந்தப்படி அடித்து விடுவார்கள். இதை 78 நாட்களாக பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலிப்பே வந்து விட்டது. இதை சில வாரங்களுக்கு முன்பே கணித்த தீர்க்கதரிசி யார்? என்றால் அது தாமரை தான்..

  இதே போல் ஒரு வாரம் நடைப்பெற்ற தலைவர் டாஸ்கில் “ஏன் பாப்பா இதெல்லா ஒரு பிரண்ட்ஷிப்பா” என்றார். அடுத்த கணமே பிரியங்காவிடம் போய் “நிரூப்பிடம் நீ காட்டும் பிரண்ட்ஷிப் கேம் பிளானா” என்றார். ”அப்ப புரியல இப்ப புரியுது தாமரை” என்பது தான் ஆடியன்ஸின் தற்போதைய மைண்ட்வாய்ஸ். அது எப்படி பெஸ்ட் பிரண்ட்ஸ் இவ்வளவு தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வார்கள்? இதுக்கு பேரு பிரண்ட்ஷிப் என்றால் நட்புக்காக உயிரை கொடுப்பதற்கு பேரு என்ன? ஒருவேளை நாமா தான் இவ்வளவு நாள் பிரண்ட்ஷிப்புக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளாமல் இருந்துட்டோமோ? என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறார்கள் இந்த உலகமகா நட்புக்காரர்கள்.

  பிக் பாஸ் வீட்டில் 78 ஆவது நாள் இந்த வார தலைவருக்கான டாஸ்க் உடன் தொடங்கியது. கயிற்றை விடாமல் பிடித்திருக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார். ஆரம்பத்தில் எல்லோரும் நான் தான் இந்த வார தலைவர் என்ற பில்டப்புடன் கயிறை பிடித்தனர். கார்டன் ஏரியாவில் இருந்து பெட்ரூம் சென்றனர். பெட் ரூமில் இருந்து நிரூப்புக்காக ஸ்மோகிங் ரூம் சென்றனர். அடுத்தது பாத்ரூம் செல்லலாம் என அக்‌ஷரா சொல்ல, அதற்கு நிரூப் எதிர்ப்பு தெரிவித்தார்.

  பாத்ரூமில் கயிறை விட்டால் எப்படி நமக்கு தெரியும்? கேமிரா இல்லை என்றார். இதனால் தாமரைக்கும் நிரூப்புக்கும் சண்டை முட்டியது.தாமரை விடாப்பிடியாக நின்று பாத்ரூம் சென்றார். ஆனால் மற்றவர்கள் இதை செய்ய சற்று தயங்கினர். நிரூப்பின் பிரேக் த ரூல் மூளையில் உரக்கச்சொல்ல, கயிறை இழுக்க முயன்றார். இதற்கு பிரியங்கா எதிர்ப்பு தெரிவிக்க, அமீர் சாமர்த்தியமாக நிரூப்பிடம் போட்டிக்கு சென்றார். ஆனால் நிரூப் பிரியங்கா பாவனி பக்கம் போக, வழக்கம் போல் பிரியங்கா சவுண்ட் விட்டார். இதனால் அமீருக்கும் நிரூப்புக்கும் சண்டை வரும் என எதிர்பார்த்த நேரத்தில் முதல் ஆளாக கயிறை விட்டு தூங்க சென்றார். அடுத்து சஞ்சீவ், அவருக்கு அடுத்து பாவனி, அடுத்தது அக்‌ஷரா ஆட்டத்தில் இருந்து வெளியேறினர்.

  அக்‌ஷரா டாஸ்கில் இருந்து போக முடிவு எடுத்த போது வருணுக்கு முத்தம் தந்துவிட்டு சென்றார். நோட் பண்ணிக்கோங்க. இந்த முத்தம் பிக் பாஸ் 5 வீட்டில் அரங்கேறும் 2.0 வெர்ஷன். ஏற்கெனவே அமீர் - பாவனி முத்த யுத்தத்துக்கே தீர்வு கிடைக்காத நிலையில் அடுத்தது அக்‌ஷரா - வருண் லைனில் சேர்ந்தனர். நடு இரவில் வருணும் கேம்மை விட்டு விலகினார்.

  காசு இருக்குன்னு இப்படியா? சம்யுக்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

  பொழுது விடிந்தது ராஜூ, சிபி, அமீர், நிரூப், தாமரை ஆகியோர் விடாமல் கயிறை பிடித்திருந்தனர். இரவு நடந்த சம்பவத்தை மறக்காத பிரியங்கா பொழுது விடிந்த உடனே நிரூப் மீது அதை காட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராஜூவும் ஆட்டத்தை விட்டு வெளியேற, சிபியும் கயிறை விட்டார். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாய் ”தாமரை அக்கா உங்களுக்காக தான் விடுறேன். நீங்க தலைவர் ஆகணும்” என்றார்.

  அமீர், நிரூப், தாமரை ஆட்டத்தை தொடர, பிக் பாஸ் தலைவர் போட்டி குறித்து பேச்சு வார்த்தை நடத்த சொன்னார். சிபி, நாமினேஷனில் இருந்து தப்பிப்பது பற்றியும் பேசுங்கள் என்றார். நிரூப் “எனக்கு பயமா இருக்கு நான் பயந்துட்டேன்”ன்னு சொல்ல பிரியங்காவின் மண்டை சூடாகியது. ”இதை வைத்து ஏமாற்றுகிறாய் நிரூப்” என்றார்.

  கடுப்பான நிரூப் பிரியங்காவிடம் சண்டைக்கு போக, உடனே பிரியங்க ”நான் உன்கிட்ட பேசல, தாமரைக்கு உன் திட்டம் புரியல அதை தான் எடுத்து சொன்னே”ன்னு சொல்ல மொத்த ஹவுஸ்மேட்ஸூக்கும் கோபம் வந்தது. தாமரைக்கு புரியல, தெரியல பற்றி நீங்க பேசாதீங்கன்னு சஞ்சீவ் அட்வைஸ் செய்தார். அதே அட்வைஸை தான் பாவனியும் செய்தார். உடனே பிரியங்கா இதுதான் என் கேம் பிளான் என்றார். தவளை தன் வாயல கெடும் நிலைமைதான்.

  கோபத்தில் நிரூப் கயிறை விட்டார். ஆனால் அதற்கு காரணம் பிரியங்கா மட்டுமே என முடிவு எடுத்தவர் கோபத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினார். பிரியங்காவை பார்த்து “நீ ஒரு பேய் பிசாசு, அடுத்தவர்களை கீழே தள்ளி அசிங்கப்படுத்தும் ராட்சசி, கேவலமான குணம் கொண்டவள், அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை விடும் அதிக பிரசங்கி” என சக ஹவுஸ்மேட்ஸ் முன்னாடி வார்த்தகளை கொட்டினார்.

  பிக் பாஸ் : பிரியங்காவின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டும் கமல்!

  பிரியங்கா கண் கலங்கி அழ, நிரூப்பிடம் ஏன் இப்படி பேசினாய்? என ராஜூ சப்போர்டுக்கு போனார். இந்த அழிகிய புரிதல் கூட நிரூப் - பிரியங்கா பிரண்ட்ஷிப்பில் இல்லை என்பதே உண்மை. பிரியங்கா ஒரு ஓரமாய் கண்கலங்கி அழ தொடங்கினார். இறுதியில் டாஸ்கின் முடிவில் தாமரைக்காக அமீர் விட்டுக் கொடுத்தார். அதற்கு சக போட்டியாளர்களிடம் இருந்து அமீருக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.

  இந்த வார நாமினேஷன் தொடங்கியது. நிருப் - பிரியங்கா சண்டையை காரணமாக சொல்லியே நிரூப், பிரிய்ங்கா பெயரை ஹவுஸ்மேட்ஸ் நாமினேஷன் லிஸ்டில் சேர்த்தனர். அடுத்தது அக்‌ஷரா, வருண், பாவனி நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். இந்த வாரம் கண்டிப்பாக யார் வெளியேற போவது என்பதை கணிப்பதில் பல சிக்கல்கள் உள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: