Home /News /entertainment /

பிக் பாஸ் 5ல் மீண்டும் கமல்... சோஃபா போட்டு தாமரை - பிரியங்கா பிரச்சனையை விசாரிக்கிறார்!

பிக் பாஸ் 5ல் மீண்டும் கமல்... சோஃபா போட்டு தாமரை - பிரியங்கா பிரச்சனையை விசாரிக்கிறார்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

லக்ஸரி பட்ஜெட் பொருள்களை புதுமையான முறையில் விநியோகிக்க திட்டமிட்டார் பிக்பாஸ்

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 60 நாட்களை நெருங்கியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இவர்களில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், மற்றவர்கள் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தாமரை பாத்திரம் விளக்கி கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா, அபிஷேக், பாவ்னி மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தாமரை தனியாக பாத்திரம் விளக்கி கொண்டிருந்ததை பார்த்த பிரியங்கா, நீதான் சமையல் வேலை முழுவதையும் செய்கிறாய், பின்னர் எதற்காக பாத்திரமும் கழுவுகிறாய்? என கேள்வி எழுப்பினார். பாத்திரம் கழுவும் அணியினர் யார்? அவர்கள் ஏன் இதனை செய்யவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நிரூப் தாமரைக்கே இதில் பிரச்னையில்லை, நீ ஏன் இப்படி கத்துகிறாய்? என்றார்.

    இமான், ராஜூ , சஞ்சீவ் ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியினர் என்பதால் மூவரும் இந்த சத்தம் கேட்டு வெளியே வந்தனர். பின்னர் ராஜு, சென்று பாத்திரத்தை கழுவிட்டு தூங்க சென்றார். மேலும் பிரியங்காவிடமும் மற்ற நேரத்தில் அவரை கழுவி ஊத்துகிறீர்கள், இப்போ அவர் பாத்திரம் கழுவுவது உங்களுக்கு பார்க்க கஷ்டமாக இருக்கிறதா என்றார். அதற்கு பிரியங்கா, அது டாஸ்க் என விளக்கம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து "பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்" டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள், செயல்பாடாதவர்கள் யார் என்பதை இன்று தேர்வு செய்யுமாறு பிக் பாஸ் அறிவித்தார். சிறப்பாக செயல்பட்டவர்களாக ராஜு, அபிஷேக், பிரியங்கா ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் நிரூப், பாவ்னி இருவரும் சிறப்பாக செயல்படாத நபர்கள் என சக ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்தனர். இதனால் இருவரும் ஜெயிலுக்கு சென்றனர். அப்போது ஜெயிலில் இருந்த நிரூப், இனிமே பழைய நிரூப்பா மாறப் போறேன், பிரியங்கா – அபிஷேக் கேம் எல்லாம் இனி கிடையாது என்று பாவனியிடம் கூறினார். அதேநேரத்தில் மறுபுறம், பிரியங்காவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்த அமீர், நிரூப், அபிஷேக்கிற்காக விளையாடி விளையாடி உன் ஒரிஜினாலிட்டியைக் கெடுத்துக்கறே என்று சுட்டிக் காட்டினார்.



    இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகம் இருந்த நிலையில், கமல்ஹாசன் குணமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்றைய முதல் ப்ரோமோவில் இன்று கமல் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.



    தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இமான் சரியாக வேலை செய்ததாக பிரியங்கா கூறிய விவகாரம் குறித்து கமல் விவாதிக்கிறார். இதுகுறித்து தாமரையிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் இமான் அனைத்து வேலையையும் செய்கிறார் என கூறுகிறார். இதனை தொடர்ந்து பேசும் ராஜு, பிரியங்கா - தாமரை தொல்லை தாங்க முடியவில்லை, இருவரும் சண்டை போட்டு கொண்டே இருக்கின்றனர் என்கிறார். அதற்கு தாமரை பிரச்சனையே இவனால் தான் சார் என கூறும் காட்சிகள் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி