• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை!

பிரபல பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை!

பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை

பிக்பாஸ் நடிகருக்கு பெண் குழந்தை

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    அபியும் நானும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கும் நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமன நடிகை நிஷாவும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    சமீபத்தில் நிஷா கர்ப்பமானதை அடுத்து அவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் கணேஷ் வெங்கட் ராம்.



    இந்நிலையில் இன்று காலை தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கணேஷ். அந்தப் பதிவில், தாயின் கையைப் பற்றியிருக்கும் குழந்தையின் கையை புகைப்படமாக பதிவிட்டுள்ளார்.



    மேலும் அந்தப் பதிவில், இதோ எனது குட்டி இளவரசி. காலை சரியாக 7.29 மணிக்கு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. எனது மனைவியின் பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம். சுகப்பிரசவம் தான். எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

    திரைத்துறையினர் பலரும் கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    வீடியோ பார்க்க: காப்பியடித்து மாட்டிக்கொண்ட இசையமைப்பாளர்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: