பிக் பாஸ் தாமரைச் செல்வியா இது? என பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த வீடியோ. நாடக கலைஞர் தாமரை செல்வி நாடகத்தை அரங்கேற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 ஆவது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் நாடக கலைஞர் தாமரை செல்வி. தனது கிராமத்தினரே பாராட்டும் நாடக கலைஞர் தாமரை செல்வி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறிய வயதிலேயே உணவுக்கே கஷ்டமாக இருந்ததால் தெருக் கூத்து நாடகத்தில் தன் திறமையை வளர்த்துக்கொண்ட தாமரைச் செல்வி அதன் நுணுக்கங்களை கற்று கொண்டு வள்ளி தெய்வானை நாடகத்தை நடத்தி வருகிறார்.
விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இதில் தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து விலகினார்.
வரும் வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ‘ஒரு கத சொல்லட்டுமா சார்?’ டாஸ்க்கில் தாமரைச்செல்வி பேசுகிறார். தனது மகன் தங்கள் வீட்டுக்கு வராமல் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், நேரிலும் சரி, ஃபோனிலும் சரி தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவனைப் பார்த்து 4 மாதங்கள் ஆகிறது என்றும் கூறி அழுகிறார். இந்த நிகழ்ச்சியில் இதை சொல்லாவிட்டால், அம்மா படும் கஷ்டம் மகனுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால் தான், இங்கு வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதைக்கேட்ட மற்ற போட்டியாளர்கள் கண்ணீர் விடுகின்றனர்.
உள்ளே பிக்பாஸ் தாமரைச் செல்வி பேசும் வீடியோ பலரின் மனங்களையும் வென்றெடுத்த நிலையில் தற்போது யூடியூபில் தாமரைச் செல்வி ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. தாமரைச் செல்வியா இது என அனைவரும் வாய்பிளக்கும் வண்ணம் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். தாமரை செவ்வி டான்ஸ் சூப்பர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக பிக்பாஸ் அபிஷேக் பிக்பாஸ் செல்வதற்கு முன்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பிக்பாஸ் பற்றி பேசியது இணையத்தில் வைரலானது.
அபிஷேக் ராஜாவின் bigg bossக்கு முன் bigg bossக்கு பின் என இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.