’அன்புத் தம்பி’ கமல் கொடுத்த ஆட்டோகிராஃப் - நெகிழ்ந்துபோன சாண்டி!

சாண்டி

இந்த புரோமோ படப்பிடிப்பின்போது உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து சாண்டி மாஸ்ட்ர் ஆட்டோகிராப் ஒன்றை வாங்கியுள்ளார்.

  • Share this:
உலக நாயகன் கமல்ஹாசனின் ஆட்டோகிராப்பால், நடன இயக்குநர் சாண்டி உற்சாகத்தில் உள்ளார்.

விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாக உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்கான புரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான சாண்டியின், இயக்கத்தில் உருவான பிக்பாஸ் சீசன் 5 புரோமோ, எதிர்பார்த்தைப்போலவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமலின் இமேஜ் குறையாமல் சும்மா நறுக்குன்னு இருக்கும் வகையில் சாண்டி, புரோமோவை ’நச்சுனு’ உருவாக்கியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த புரோமோ படப்பிடிப்பின்போது உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து சாண்டி மாஸ்ட்ர் ஆட்டோகிராப் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாண்டி, ‘அன்றும் இன்றும் என்றும் உலகநாயகன்’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி தன்னுடை ஆஸ்தான குருக்களான கலா மாஸ்டர், நடன இயக்குநர் பிருந்தா, கிரிஜா, ஜெயந்தி உள்ளிட்டோருக்கும், மனைவி மற்றும் மகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

தன் வாழ்க்கையை செதுக்கியதில் இவர்களுக்கு முக்கிய பங்கிருப்பதாக தெரிவித்துள்ள சாண்டி, தொகுப்பாளினி டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கும் நன்றியை கூறியுள்ளார். கடினமான காலங்களில், பயணிக்க வேண்டிய பாதையை டிடி சரியாக வழிகாட்டியதாகவும் சாண்டி குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட அவர், திறமையாக விளையாடி 2வது வெற்றியாளராக வாகை சூடியிருந்தார். அந்த சீசனில் சக போட்டியாளர்களுடன் சாண்டி பழகிய விதம், அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. கவின், தர்ஷன், முகின் ஆகியோர் கூட்டணி அமைத்து பிக்பாஸை ஜோராக விளையாடினர். 
View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு சாண்டிக்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. பிக்பாஸ் சீசன் 4 புரோமோவையும் இயக்கிய அவர், அண்மையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘சர்பாட்டா பரம்பரை’ திரைபடத்திலும் நடன இயக்குநராக பணியாற்றினார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘333’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 புரோமோ வெளியாகியிருப்பதால், யாரெல்லாம் போட்டியாளர்களாக வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also read... விஜய்யை வைத்து சூப்பர் ஹீரோ படத்தை இயக்கும் இரஞ்சித்...?

விஜய் டீவி தன் பங்கிற்கு போடியாளர்களை சரியாக கணித்து சொல்லுங்கள் என கூறியுள்ளதால், கணிப்புகள் கொடிக்கட்டி பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய் டீவியின் தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்ள இருப்பதாக பரவியுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் கனி, சுனிதா, சூசன் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனைப் போலவே செய்திவாசிப்பாளர், பாடிபில்டர், தொகுப்பாளர் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: