ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 5: பாவனியை வெட்கப்பட வைத்த அமீர்!

Bigg Boss Tamil 5: பாவனியை வெட்கப்பட வைத்த அமீர்!

எப்போதும் சண்டை சச்சரவாக வெளியாகும் பிக் பாஸ் ப்ரோமோக்களுக்கு இடையே, இந்த ப்ரோமோ கலகலப்பாக பார்வையாளர்களை புன்னகைக்க வைக்கிறது.

எப்போதும் சண்டை சச்சரவாக வெளியாகும் பிக் பாஸ் ப்ரோமோக்களுக்கு இடையே, இந்த ப்ரோமோ கலகலப்பாக பார்வையாளர்களை புன்னகைக்க வைக்கிறது.

எப்போதும் சண்டை சச்சரவாக வெளியாகும் பிக் பாஸ் ப்ரோமோக்களுக்கு இடையே, இந்த ப்ரோமோ கலகலப்பாக பார்வையாளர்களை புன்னகைக்க வைக்கிறது.

 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

  இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த வார நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

  இதற்கிடையே அபிஷேக், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் கொரோனோவிலிருந்து குணமடைந்த கமல், மீண்டும் பிக் பாஸ் செட்டுக்கு திரும்பினார். இதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்று கிழமை அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

  தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், அமீர், பாவனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் பின்னர் பிரியங்காவும் இணைந்துக் கொள்கிறார். ‘நான் உங்க ஃபேன்னு சொல்லும் போது ஒரு சிரிப்பு சிரிச்சீங்களே, அதை திரும்பவும் சிரிங்க’ என அமீர் கேட்க, வெட்கப்பட்டு சிரிக்கிறார் பாவனி. எப்போதும் சண்டை சச்சரவாக வெளியாகும் பிக் பாஸ் ப்ரோமோக்களுக்கு இடையே, இந்த ப்ரோமோ கலகலப்பாக பார்வையாளர்களை புன்னகைக்க வைக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: