முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss Tamil 5: போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வருகை!

Bigg Boss Tamil 5: போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வருகை!

 தற்போது வெளியான ப்ரோமோவில், இந்த வாரம் குடும்பங்கள் ஒன்றிணையும் வாரமாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

தற்போது வெளியான ப்ரோமோவில், இந்த வாரம் குடும்பங்கள் ஒன்றிணையும் வாரமாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

தற்போது வெளியான ப்ரோமோவில், இந்த வாரம் குடும்பங்கள் ஒன்றிணையும் வாரமாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

 • 1-MIN READ
 • Last Updated :

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

  இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அபினய் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.

  இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், இந்த வாரம் குடும்பங்கள் ஒன்றிணையும் வாரமாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீ வைண்ட் போன்ற வார்த்தைகள் நிறைய இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது எல்லோரையும் ஃப்ரீஸ் சொல்கிறார் பிக் பாஸ். அந்த நேரம் அக்‌ஷரா அம்மாவின் குரல் கேட்கிறது. ‘அம்மா இங்க தான் இருக்காங்க. மம்மா... மம்மா’ என கத்துகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டின் கதவு திறக்க அக்‌ஷராவின் அம்மாவும், சகோதரரும் உள்ளே வருகிறார்கள்.

  ஆக இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவிருப்பதால், வரும் நாட்களில் நிறைய உணர்ச்சித் ததும்பல்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: