ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 5: பிரியங்கா, அபிஷேக்கை உதவியாளராக நியமிக்கும் நிரூப் - கடுப்பாகும் ஹவுஸ் மேட்ஸ்!

Bigg Boss Tamil 5: பிரியங்கா, அபிஷேக்கை உதவியாளராக நியமிக்கும் நிரூப் - கடுப்பாகும் ஹவுஸ் மேட்ஸ்!

பிக் பாஸ் வீட்டில் நிரூப் - இமான், பிரியங்கா இடையே இன்று பிரச்னை ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நிரூப் - இமான், பிரியங்கா இடையே இன்று பிரச்னை ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நிரூப் - இமான், பிரியங்கா இடையே இன்று பிரச்னை ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் தற்போது சிபி, ராஜு, இமான், வருண், நிரூப், அபினய், அக்ஷ்ரா, பாவ்னி, தாமரை, பிரியங்கா, ஐக்கி ஆகியோர் இருக்கின்றனர்.

இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக 3 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். ரீ-எண்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா, முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் அமீர் மற்றும் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சீவ் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று வருகிறது. கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, ஐக்கி, இமான், பாவ்னி, நிரூப், தாமரை ஆகியோர் இருந்தனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஐக்கி நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வார தலைவருக்கான போட்டி நடைபெறுவது இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியானது. அதில் "கோபுரங்கள் சாய்வதில்லை" என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பெட்டிகள் கொடுக்கப்பட்டு அதனை போட்டியாளர்கள் அடுக்கி வைக்க வேண்டும், சக ஹவுஸ் மேட்ஸ் ஒரு பந்தை கொண்டு எரிந்து அதனை கீழே விழுமாறு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. மேலும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி தங்களது கோபுரம் மீது பந்தை எரியவிடாமல் திசை திருப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சிபி, ராஜு மற்றும் இமான் ஆகிய மூவரும் பங்கேற்கும் இந்த டாஸ்கில் இமான் வெற்றி பெறுகிறார். ஆனால் நாணயம் வைத்திருப்பவர்களுக்கு தலைவரை மாற்றும் சலுகைக்கான வாய்ப்பளிக்கப்படுகிறது என பிக் பாஸ் கூற, ‘நான் பண்றேன் பிக் பாஸ்’ என்கிறார் நிரூப். அதற்கு நீ பயந்துட்ட டா என அண்ணாச்சி கூறும் காட்சிகள் இருந்தது.

இரண்டாவது ப்ரோமோவில், நிரூப் வழக்கம் போல வீட்டு வேலைகள் செய்ய அணிகள் பிரிக்கிறார். அப்போது நிரூப் கூறுவதை கேட்க இமான் மறுக்கும் காட்சிகள் உள்ளது. மேலும் நீ கூறுவதை என்னால் செய்ய முடியாது என இமான் கூறுகிறார். அதற்கு நான் கூறுவதை கேட்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? என நிரூப், பிக் பாஸிடம் கேட்கும் காட்சிகள் உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நிரூப் தனது உதவியாளராக பிரியங்கா மற்றும் அபிஷேக்கை நியமிக்கிறார். ஆனால் இது தவறு அவர்கள் இருவரும் இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக இமான் வாக்குவாதம் செய்கிறார். இதனால் கடுப்பாகும் பிரியங்கா, இதுவரை நான் தவறாக எந்த ஒரு அதிகாரத்தையும் பயன்படுத்தியதில்லை என்கிறார்.

மேலும் நீங்கள் வேலையை ஓபி அடிக்கிறீர்கள் என இமானை பார்த்து கேட்கிறார். இமான் தற்போது வரை தலைவராக இருந்ததில்லை என்பதால் இந்தமுறை தலைவராக விரும்புகிறார். ஆனால் நிரூப் தன்னிடம் நாணயம் இருப்பதால் அதனை பயன்படுத்தி தலைவராகிறார். இதனால் இன்று நிரூப் - இமான், பிரியங்கா இடையே பிரச்னை ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இன்று நாமினேஷனும் நடைபெறும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: