விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி யின் 5வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக 79வது நாளை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை என்பதால் வீட்டின் தலைவரை தேர்தெடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. ’உட்ராதீங்க எப்போவ்’ என்ற டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட கயிறை கடைசி வரை விடாமல் பிடித்திருப்பவரே இந்த வார தலைவர் என பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி இரவு பகலாக தொடர்ந்த இந்த டாஸ்கில் இரவு, நிரூப் கயிற்றை பிடித்து இழுத்தார். இதனால் கடுப்பான பிரியங்கா . கயிற்றை பிடித்திருக்க வேண்டும் என்று தான் பிக் பாஸ் அறிவித்தார், இழுக்க சொல்லவில்லை என கூறி போட்டியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து சஞ்சீவ், பாவ்னி, அக்ஷ்ரா, வருண் என அடுத்தடுத்து வெளியேறினர்.
மறுநாள் காலை வரை தொடர்ந்த இந்த டாஸ்கில், ராஜு, சிபி வெளியேறினர். இறுதியாக நிரூப், அமீர், தாமரை இருந்த நிலையில் மூவரும் கலந்து பேசி யார் தலைவர் என கூறுமாறு பிக் பாஸ் அறிவித்தார். அப்போது நிரூப், எனக்கு நாமினேஷன் குறித்து பயமாக இருப்பதால் விட்டுத்தருமாறு தாமரையிடம் கேட்டார். இதனை அங்கிருந்து கேட்டுக்கொண்டிருந்த பிரியங்கா, இதனை தான் கடைசி வாரமும் கூறினாய், பின்னர் அதை விளையாட்டு யுக்தி என்றாய் என கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான நிரூப் ,நீ அனைத்து பிரச்னை நடக்கும் போதும் சரியோ... தவறோ.. உன் வாய்ஸ் இருக்க வேண்டும் என பேசுகிறாய் என கத்தினார். மேலும் நீ ஒரு செல்பிஷ், ஈவில், அடுத்தவர்களின் கஷ்டத்தை பார்த்து சந்தோசப்படும் ஒரே நபர் நீ தான் அடுக்கடுக்காக குற்றம் சாட்டிவிட்டு கோபமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இறுதியாக அமீர், தாமரை இருந்த நிலையில் அமீர் விட்டுக்கொடுத்ததால் தாமரை இந்தவார தலைவரானார்.
இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்ற நிலையில், இந்த வாரம் பிரியங்கா, வருண், நிரூப், அக்ஷரா, பாவ்னி ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்குகிறது. இதில் ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீ வைண்ட் போன்ற வார்த்தைகள் நிறைய இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் முதலில் அக்ஷ்ராவின் குடும்பத்தினர் வருவது இன்றைய முதல் ப்ரோமோவில் இருந்தது.
#Day79 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/IbXsLtlCTq
— Vijay Television (@vijaytelevision) December 21, 2021
இதையும் படிங்க - யுவன் இசையில் ஹீரோவாகும் கோமாளி பட இயக்குநர்!
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், கண்பெஷன் ரூமிற்கு வருமாறு சிபியை பிக் பாஸ் அழைக்கிறார். ஏதோ கூற தான் கூப்பிடுவதாக நினைத்து கொண்டே சிபி செல்லும் நிலையில், அங்கு அவரது மனைவி இருக்கிறார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த சிபி, ஏ நீ பாம்பேவில் இருப்பதாக கூறினார்கள் என சொல்லிக்கொண்டே அவரை கட்டிக்கொள்கிறார். பின்னர் இருவரும் வெளியே வந்து சக ஹவுஸ் மேட்ஸிடம் பேசும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதும் எமோஷனல், கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.