• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss Tamil 5: இசையுடன் மோதும் அபிஷேக்... நெட்டிசன்களின் பாராட்டு மழையில் அண்ணாச்சி!

Bigg Boss Tamil 5: இசையுடன் மோதும் அபிஷேக்... நெட்டிசன்களின் பாராட்டு மழையில் அண்ணாச்சி!

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

Bigg Boss Tamil 5 Promo: இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைப்பெறுகிறது.

 • Share this:
  விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், நமீதா வெளியேறியதால் 17 போட்டியாளர்கள் இருந்தனர். அதில் கடந்த வாரம் நாமினேஷனில் பாவ்னி மற்றும் வீட்டின் தலைவரான தாமரை செல்வியை தவிர இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 15 போட்டியாளர்கள் இடம் பெற்றனர்.

  சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கமல் நிகழ்ச்சியினை தொகுப்பு வழங்கி அந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் குறித்து விவாதிப்பார். அதன்படி சனிக்கிழமை கடந்து வந்த பாதை டாஸ்க் குறித்து பேசினார். மேலும் சனிக்கிழமை ராஜு, பிரியங்கா, அக்‌ஷரா, அபினய், இசைவாணி, சிபி , இமான், ஸ்ருதி, நிரூப், ஐக்கிஆகியோர் காப்பாற்றப்படுவதாக கமல் கூறினார். இதனை தொடர்ந்து மதுமிதா, அபிஷேக், நாடியா, சின்ன பொண்ணு, வருண் ஆகியோர் மீதம் இருந்த நிலையில் அதில் நாடியா சிங் எலிமினேட் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார். அபிஷேக் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடியா வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதனிடையே கடந்த இரண்டு வாரங்களில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர் மற்றும் கூட்டத்தில் காணாமல் போன இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை கருத்துக்கணிப்பு செய்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்கு அபிஷேக், அக்ஷரா மற்றும் பாவ்னி ஆகிய 3 பேர் தலைவர்களாக இருந்தனர். இதுகுறித்து கமல் விசாரித்த நிலையில், சிறப்பாக செயல்பட்ட நபர் இமான் அண்ணாச்சி என அபிஷேக் கூறினார். மேலும் காணாமல் போன இருவர் நாடியா மற்றும் சின்ன பொண்ணு என அவர் கூற, மக்கள் முன்னிலையிலும், இந்த வீட்டிலும் காணாமல் போக மாட்டேன் என சின்ன பொண்ணு அழுது விட்டார், அவரை அக்ஷரா சமாதானம் செய்தார்.  இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், வீட்டின் இரண்டாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்கில் அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் பெண்கள் உடையை அணிந்துள்ளனர். "என்ன பீலிங்" என்ற பெயரில் தொடங்கும் டாஸ்கில் ஒருவரின் உணர்வுகளை தூண்ட வேண்டும் என கூறப்படுவது தெரிகிறது. முதலில் ராஜூவை அனைவரும் சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். பின்னர் இசையை சீண்டும் அபிஷேக், சின்னவயதில் இருந்து நீ கஷ்டப்பட்டது எல்லாம் போதாதா? அப்படி கஷ்டப்பட்டு இந்த டாஸ்கில் நீ வெற்றி பெற வேண்டுமா? ஒரு சட்டை வாங்க கூட எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாய் என பேசுகிறார்.

  இதனால் ஆத்திரமடைந்த இமான், டாஸ்கில் இப்படியெல்லாம் பேச கூடாது, சிரிக்க மட்டும் வையுங்கள் என்கிறார். அதற்கு வருண், நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை, அவர் கதையை கூறினால் எமோஷனல் அவர் என்பதால் இப்படி சொல்கிறோம் என்கிறார். மேலும் இதில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை மட்டுமே நிற்பதால் இவர்களில் ஒருவர் தான் இந்த வார தலைவராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில் இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் நடப்பது தெரிகிறது. அதில் நடிகை பாவனியை ஹவுஸ் மேட்ஸ் டார்கெட் செய்வது காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இமான், பாவ்னி மற்றும் இசையை நாமினேட் செய்கிறார். இமான் மற்றும் பாவ்னி எப்போதும் ஒன்றாக இருப்பார்கள், மேலும் பாவ்னிக்கு அவ்வப்போது ஆறுதல் சொல்லும் இமான் அவரையே நாமினேட் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை தொடர்ந்து சின்ன பொண்ணுவை ராஜு, அபிஷேக் மற்றும் பிரியங்கா நாமினேட் செய்கின்றனர். நாடகம் டாஸ்க் நடைபெற்ற போது சின்ன பொண்ணு பிரச்சனையை ஏற்படுத்தியதால் அவரை நாமினேட் செய்வதாக ராஜு கூறுகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: