• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • MGR மட்டும் இதை செய்யலன்னா எங்க குடும்பமே காலியாகி இருக்கும் - பிக்பாஸ் வருண் கூறிய கதை!

MGR மட்டும் இதை செய்யலன்னா எங்க குடும்பமே காலியாகி இருக்கும் - பிக்பாஸ் வருண் கூறிய கதை!

வருண்

வருண்

எம்ஜிஆர் மட்டும் இல்லாவிட்டால் எங்கள் குடும்பம் அப்போதே காலியாகி இருக்கும். மாமா ஐசரி கணேஷ் ஒன்மேன் ஆர்மியாக உழைத்து முன்னுக்கு வந்தார்.

 • Share this:
  ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்று இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான ஐசரி வருண் தனது குடும்ப வரலாறு, தான் வளர்க்கப்பட்ட விதம் மற்றும் சினிமாத்துறையில் என்னவாக வர வேண்டும் என்ற தன்னுடைய ஆசைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஷோவின் 'கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் பகிர்ந்து கொண்டார். பிக்பாஸின் ஐந்தாவது சீசனில் பங்கேற்று இருக்கும் ஐசரி வருண், பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் பேரன் ஆவார்.

  எம்ஜிஆருடன் ரிக்ஷகாரன், இதயக்கனி போன்ற பல படங்களில் நகைச்சுவையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐசரி வேலன். நாடக கலைஞரான இவர் 1970-ல் சிவாஜி நடித்த எங்க மாமா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். எனினும் இவர் எம்ஜிஆர்-உடன் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். அரசியாலில் நுழைந்த ஐசரி வேளாண் அதிமுக கட்சியிலும் தன்னை இணைத்து கொண்டார். 1977-ஆம் ஆண்டு டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரும் ஆனார்.

  எம்ஜிஆர் தலைமையில் அமைந்த முதலாவது அமைச்சரவையில் துணை அமைச்சராக இடம் பிடித்து, தமிழகத்தில் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றவர். இவரது பேரன் தான் நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான வருண். கதை சொல்லட்டுமா டாஸ்கின் போது பேசிய வருண், எனது தாத்தா எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய போது தேர்தலில் ஜெயிப்பதற்காக ஏராளமான பிரச்சாரம் செய்துள்ளார். அதற்கு முன்பே நிறைய அரசியல் கூட்டங்களுக்காக நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்.

  அவர் நாடகத்தில் நடித்து விட்டு சம்பாதித்து கொடுக்கும் காசில் தான் எங்கள் குடும்பத்தினர் ஒரு வேளையாவது நிம்மதியாக சாப்பிட்டுள்ளனர். என் தாத்தாவிற்கு என் அம்மா, சித்தி, மாமா ஐசரி கணேஷ் உட்பட மொத்தம் 4 பிள்ளைகள். நாடகம் ஒன்றில் நடித்து கொண்டிருந்த போதே மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டார். இதனால் எங்களது குடும்பம் சுமார் ரூ.7 லட்சம் கடனில் சிக்கி கொண்டது. எம்ஜிஆரிடம் கேட்டவுடன் நிதி கொடுத்து உதவினார். ஆனால் அடுத்த 4 நாளிலேயே எம்ஜிஆர் இறந்து விட்டார்.

  Also read... தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத்துக்கு ஹேப்பி பர்த்டே!

  எம்ஜிஆர் மட்டும் இல்லாவிட்டால் எங்கள் குடும்பம் அப்போதே காலியாகி இருக்கும். மாமா ஐசரி கணேஷ் ஒன்மேன் ஆர்மியாக உழைத்து முன்னுக்கு வந்தார். சிறு வயதிலேயே வறுமையை அனுபவித்து இருந்த போதும் கூட, வசதி வந்தவுடன் என்னை சில்வர் ஸ்பூனுடன் எல்லாம் வளர்க்கவில்லை. நான் கேட்ட எல்லாவற்றையும் என் வீட்டில் வாங்கி கொடுத்ததில்லை எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் வீண் செலவுகள் எதுவும் என் வீட்டினர் செய்ய மாட்டார்கள்.

  10-வது படிக்கும் போது யார் உதவியும் இன்றி சினிமாவில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆசையை நனவாக்க சிறிது சிறிதாக எல்லாவற்றையும் கற்று கொண்டேன். முதன் முதலில் தலைவா படத்தில் நடித்தேன். பின்னர் ஒருநாள் இரவில், போகன் என்று அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தது. அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல இனியும் கற்று கொண்டே இருப்பேன் என்றார். எந்த கேரக்டர் கிடைத்தாலும் அதை சிறப்பாக செய்வேன் என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: