இந்த வாரம் வெளியேறும் நபர் இவர் தான் - விஜய் டிவி பிரபலம் பதிவு

இந்த வாரம் வெளியேறும் நபர் இவர் தான் - விஜய் டிவி பிரபலம் பதிவு

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்தவாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் கடந்த வார இறுதியில் 10-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார் அனிதா சம்பத். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரம்யா, ஷிவானி, கேபி, சோம் மற்றும் ஆஜித் உள்ளனர்.

இவர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறாரா அல்லது டபுள் எவிக்‌ஷன் இருக்குமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த ரம்யா பாண்டியனின் சகோதரர், “இந்த வாரம் எவிக்‌ஷன் அல்லது டபுள் எவிக்‌ஷன் நடந்து நீ வெளியில் வந்தால் அதற்கு காரணம் நீ இல்லை” என்று அவரிடம் கூறினார். அதேவேளையில் ஷிவானியின் தாயார், ஆரியின் விளையாட்டை பாராட்டியிருந்தார்.

ஆரி, ரியோ, பாலாஜி ஆகிய மூவரில் ஒருவர் தான் இம்முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்வார்கள் என பார்வையாளர்கள் கணித்திருக்கின்றனர். நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டே வாரங்களே மீதமிருக்கும் நிலையில் இந்தவாரம் வெளியேற்றப்படப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: பாஜகவில் இணைந்த பிரபல நடிகர் - குஷ்பு மகிழ்ச்சி

இந்நிலையில் இசையமைப்பாளரும், விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியவருமான ஜேம்ஸ் வசந்தன், “மக்களின் எண்ண ஓட்டத்தை சரியாக நான் கணித்திருந்தால் இந்த வாரம் ஆரம்பத்திலேயே சோம் மற்றும் ஷிவானி காப்பாற்றப்படுவார்கள். ரம்யா பாண்டியன் வெளியேற்றப்ப்படுவார்” என்று சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஜேம்ஸ் வசந்தனின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: