பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சனா

அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுசித்ரா, அர்ச்சனா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க எண்ணிக்கை 18 ஆனது. 75-நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் 10 பேரில் ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ, சோம் ஆகிய 7 பேர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவரை இந்த வாரம் பிக்பாஸ் வெளியேற்றுவாரா அல்லது கடந்த வாரம் போல் இருவர் வெளியேற்றப்படுவார்களா என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில் அர்ச்சனா ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரி, ஆஜீத், அனிதா, ஷிவானி, ரியோ, சோம் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அர்ச்சனா வெளியேற்றப்பட்டிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்திருக்கிறது.

கடந்த வாரம் மைக்கை கழற்றி வைத்து விட்டு பேசியதைக் கூறி அர்ச்சனாவை எச்சரித்த கமல்ஹாசன், இந்தவாரம் அர்ச்சனா சொன்ன நம்பர் கேமை குறிப்பிட்டு பேசியிருப்பதும் ப்ரமோ வீடியோவாக வெளியாகியுள்ளது. வரும் வாரத்துக்கான கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்று தலைவராகியிருக்கும் நிலையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

கடந்தவாரம் அறந்தாங்கி நிஷா, இந்த வாரம் அர்ச்சனா என அன்பு குரூப்பிலிருந்து முக்கிய நபர்கள் வெளியேறியிருப்பதால் வரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் தெரிகிறது.

மேலும் படிக்க: காதல் சார்ந்த எதையும் தொந்தரவு செய்வது பாவம்... ‘பாவக்கதைகள்’ பற்றி இயக்குநர்கள் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்

பிக்பாஸ் 4-வது சீசன் முடிவடைய இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், பார்வையாளர்களிடம் டைட்டில் வின்னரைத் தேர்வு செய்யும் சாயல்கள் இந்தவாரம் முதலே தெரிய ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: