பிக்பாஸ் டைட்டில் வின்னர் பற்றி பேசிய கமல்ஹாசன்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பற்றி பேசிய கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிக்பாஸ் டைட்டில் வின்னரை தேர்வு செய்வதற்கான சாயல் தொடங்கிவிட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுசித்ரா, அர்ச்சனா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க எண்ணிக்கை 18 ஆனது. 75-நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் 10 பேரில் ஆரி, ஆஜீத், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ, சோம் ஆகிய 7 பேர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் உள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஆரி, ரியோ ஆகிய இருவர் காப்பாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆஜித், அர்ச்சனா, அனிதா, ஷிவானி, சோம் இவர்களில் ஒருவரை இந்த வாரம் பிக்பாஸ் வெளியேற்றுவாரா அல்லது கடந்த வாரம் போல் இருவர் வெளியேற்றப்படுவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.அதில் பேசியிருக்கும் கமல்ஹாசன், “இன்னும் 31 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஒரு வெற்றியாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க. இந்த வீட்டின் உள்ளே விளையாட்டுகளை நேர்மையாக விளையாடுகிறார்களா? என்பதை உங்கள் பிரதிநிதியாக நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

மேலும் படிக்க: சித்ராவுக்கு அரசியல்வாதிகள் உடன் தொடர்பு... ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு புகார்

உங்கள் தேர்வின் சாயல்கள் இந்தவாரம் முதலே தெரிய ஆரம்பித்துவிட்டது. உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றியமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்கிறார் கமல்ஹாசன்.
Published by:Sheik Hanifah
First published: