செய்தி வாசித்துவிட்டு கிளம்பிய அனிதா சம்பத்... இந்த வாரம் நாமினேஷனில் இருப்பது யார் யார்?

செய்தி வாசித்துவிட்டு கிளம்பிய அனிதா சம்பத்... இந்த வாரம் நாமினேஷனில் இருப்பது யார் யார்?

பிக்பாஸ் தமிழ் 4

அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தவார நாமினேஷன் தொடங்கியுள்ளது.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஆரி, அனிதா, ஆஜித், ஷிவானி மற்றும் கேப்ரியலா இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆரி முதலில் காப்பாற்றப்பட்டார். வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கமல் விவாதிப்பார். அந்த வகையில் சனிக்கிழமை, கடந்த வார கேப்டனான பாலாஜி பொறுப்புடன் செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயம் ரவி நடித்து வெளியாக தயாராக இருக்கும் ‘பூமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஜெயம் ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவருக்கு அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் வாழ்த்துகள் கூறினர். நேற்றைய எபிசோடில் ஆரிக்கும், அனிதாவுக்கும் இடையிலான பிரச்னையை மீண்டும் எடுத்து வந்தார் கமல். அப்போது பேசிய ஆரி, பலி வாங்கும் விதமாக விளையாடுகிறார் என்று என்னை அனிதா சொன்னது ரொம்பவே காயப்படுத்தியது. அவரிடம் தான் நான் அதிகம் பேசுவேன். அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன்.

அப்படி இருக்கும் போது அனிதா, இதை பேசாதே அதை பேசாதே என்று கூறுவது எனது கருத்துகளை கூற விடாமல் தடுக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த வீட்டில் மற்ற போட்டியாளர்களும் கருத்துகள் கூற யோசிப்பார்கள் என்றார். அப்போது பேசிய கமல், நான் ஒரு குறிப்பிட்ட காலம் வரை என் குரல் தான் அழகானது என்று நினைத்தேன். எப்போது மற்றவர்கள் குரலை கேட்க தொடங்கினேனோ அப்போதே சிறந்த குரல்கள் இருப்பது தெரியவந்தது. அதனால் நீங்களும் மற்றவர்கள் குரலுக்கு செவி சாயுங்கள் என்று அனிதாவிற்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் கேபிரியலா மற்றும் ஷிவானி காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக ஆஜித் மற்றும் அனிதா இருந்த நிலையில், அனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இதனை ஏற்கனவே எதிர்பார்த்தது போல இருந்த அனிதா, எவ்வித கவலைகள் இன்றியும் கிளம்பு தயாரானார். வழக்கமாக அனைத்து போட்டியாளரும் வெளியேறும் முன் உண்டியலை உடைத்து அதில் இருக்கும் காயின்களை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அனிதா உண்டியலை உடைக்காமல் அந்த காயின்களை ஏற்கனவே எடுத்து கையில் வைத்திருந்து ஹவுஸ் மேட்ஸிற்கு கொடுத்தார்.

இதனையடுத்து 'இதுவரை அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றினீர்கள். அதே போல வெளியே போகும் போதும் கடைபிடிப்பீகள் என நினைக்கிறேன்’ என பிக் பாஸ் அவரை கண்டித்தார், பின்னர் பாலாஜி சென்று உண்டியலை எடுத்து வந்து அதன் மேல் பகுதியை மட்டும் பொறுமையாக உடைத்து அவரை வழியனுப்பி வைத்தார். கடைசியாக தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதை செய்தியாக வாசித்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்குகிறது. அதில், ஆரி இந்த வார கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவிக்கிறார்.இதனைக் கேட்ட பாலாஜி, கடந்த 12 வாரங்களாக இதை வைத்து தானே ஓட்டி கொண்டிருந்தேன் என்கிறார். பின்னர் நடைபெறும் ஓபன் நாமினேஷனில் முதலில் வந்த ரம்யா, ஆஜித் மற்றும் கேபியை கூறுகிறார். ரியோ, என் எதிர்க்கட்சி என்பதால் ரம்யாவை நாமினேட் செய்வதாக கூறுகிறார். சோம் மற்றும் கேபி இருவரும் ஆஜித் மற்றும் ஷிவானியை நாமினேட் செய்கிறார்கள். இறுதியாக ஷிவானி, ஆஜித் மற்றும் கேபியை நாமினேட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் ஆஜித், ஷிவானி மற்றும் கேபிரியல்லா இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வாரம் யாரெல்லம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற முழு விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும், மேலும் இரண்டாவது முறையாக ஓபன் நாமினேஷன் நடப்பதால் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: