அர்ச்சனாவுக்கு பின்... இந்த வார நாமினேஷனில் குறிவைக்கப்பட்டவர்கள் யார்?

அர்ச்சனாவுக்கு பின்... இந்த வார நாமினேஷனில் குறிவைக்கப்பட்டவர்கள் யார்?

பிக்பாஸ் தமிழ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன் தொடங்கியுள்ளது.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.ரேகா, வேல்முருகன், சுரேஷ், சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோரைத் தொடர்ந்து 9 வது போட்டியாளராக நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யமாக அனைத்து விஷயங்களையும் செய்தவர்களில் அர்ச்சனாவும் ஒருவர்.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் பாலாஜி, ரம்யா, அர்ச்சனா ஆகியோர் பங்கேற்ற நிலையில் சிறப்பாக விளையாடி அதில் வெற்றி பெற்றிருந்தார் அர்ச்சனா. தலைவர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால் அர்ச்சனா இதனை முன்னவே எதிர்பார்த்தது போல மிகவும் கூலாகவே இருந்தார். ரியோ, சோம், கேபி கவலையாக கண்கலங்கிய நிலையில் அடச்சீ எழுங்க' என கூறி அவர்களை மகிழ்ச்சியாக இருக்குமாறும் கூறினார்.

'நீதான் டைட்டில் ஜெயிக்கனும்', எனக்காக வென்றுவிட்டு வா என ரியோவிடம் கூறினார். அதன் பின் தன் உண்டியலை உடைத்து அதில் இருக்கும் அனைத்து காயின்களையும் கேபியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் வெளியே செல்லும் முன்னர் அவரை அழைத்த பிக்பாஸ், அச்சு வாழ்த்துக்கள், உங்களுக்காக ஒரு விர்ச்சுவல் ஹக் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

மேலும் தான் தன் மகளை சந்திக்க போவதால் மகிழ்ச்சியில் இருப்பதாக துள்ளி குதித்தவாறு சென்றார் அர்ச்சனா. இறுதியாக அவர் வெளியேறிய போது இங்கு முதலில் 40 நாள் இருந்தால் போதும் என்று தான் வந்தேன். தற்போது இருந்ததே அதிகம் தான் என கமலிடம் கூறினார்.

மேலும் அன்புக்கு எடுத்துக்காட்டாக கோழி என என்னை பலரும் தேர்வு செய்ததில் என் வெற்றி இருக்கிறது. அன்பு தான் கடவுள், அந்த அன்பை ஒரு ஸ்டேடர்ஜி என அனைவரும் கூறினர். ஆனால் என்னை தெரிந்தவர்களுக்கு அதில் இருக்கும் உண்மை தெரியும் என கூறிவிட்டு மகிழ்ச்சியாக விடைபெற்றார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் ஜாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மை பாஸ்கி குமாரு திரும்ப வந்துவிட்டார். கடவுள் இருக்கான் குமாரு என அவர் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், வழக்கம் போல இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. ஆரியை தான் அதிகம் பேர் நாமினேட் செய்தனர். முதல் ஆளாக வந்த சோம், பாலாவை நம்பி தான் அவர்கள் இருவரும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் என கூறி ஷிவானி மற்றும் ஆஜித்தை நாமினேட் செய்வதாக கூறினார்.அடுத்து வந்த அனிதா ஷிவானியை கூறினார். இதுவரை ஷோவில் அவங்க என்ன செய்திருக்காங்க என சத்தியமா தெரியல என்கிறார். பாலாஜி, சோம் பெயரை கூறுகிறார். ஆஜித் மற்றும் கேபி ஆகியோர் அனிதாவை டார்கெட் செய்தனர்.

ரியோ, ரம்யா, ஷிவானி ஆகியோர் ஆரியை தேர்வு செய்தனர். அவர் நிறைய விஷயங்களுக்கு ஒத்துப்போவதில்லை என ரம்யா , ஆரி மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் முழு விவரமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும். முன்னதாக அர்ச்சனா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெளியேறியதால் அவரையே ரம்யா, பாலாஜியில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு கமல் கூறினார். அப்போது அர்ச்சனா, பாலாஜியை இந்த வார தலைவராக நியமித்துவிட்டு சென்றார். இதனால் பாலாஜியை இந்த வாரம் நாமின்ட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: