பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார்?

அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் அக்டோபர் 4-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆரி, பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியலா, ஆஜித், சம்யுக்தா, சோம் சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், ரியோ, பாலாஜி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட 16 போட்டியாளர்களுடன் கடந்த வாரம் 17-வது நபராக விஜே அர்ச்சனா இணைந்திருக்கிறார்.

கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியலா, ரேகா,சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

மேலும் படிக்க: நன்றி... வணக்கம் என்பதற்கு அர்த்தம் இதுதான் - விஜய்சேதுபதி பளீர் பேட்டி

ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்றால் அவரிடம் உள்ள ஃப்ரீ பாஸைப் பயன்படுத்தி தப்பிக்க முடியும். எலிமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் அந்த பாஸை ஆஜித்திடம் இருந்து திருடினால் அவர்கள் தப்பிக்கவும் வாய்ப்புண்டு.
Published by:Sheik Hanifah
First published: