பிக்பாஸ் வீட்டுக்குள் மேலும் ஒரு பெண் போட்டியாளர் என்ட்ரி?

பிக்பாஸ் வீட்டுக்குள் மேலும் ஒரு பெண் போட்டியாளர் என்ட்ரி?

பிக்பாஸ் 4 தமிழ்

பிக்பாஸ் வீட்டுக்குள் மேலும் ஒரு பெண் போட்டியாளர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  16 போட்டியாளர்களுடன் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா. இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியலா, ரேகா,சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி ஆகியோரில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நடிகை ரேகா இந்த சீசனில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

  இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்றால் அவரிடம் உள்ள ஃப்ரீ பாஸைப் பயன்படுத்தி தப்பிக்க முடியும். எலிமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் அந்த பாஸை ஆஜித்திடம் இருந்து திருடினால் அவர்கள் தப்பிக்கவும் வாய்ப்புண்டு.

  பாடகி சுசித்ரா


  இதனிடையே அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டில் இருப்போரின் முகத்திரையைக் கிழிக்க பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வைல்ட் கார்ட் மூலமாக புதிய போட்டியாளர்களை இறக்கி நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்த பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


  Published by:Sheik Hanifah
  First published: