Home » News » Entertainment » BIGG BOSS TAMIL 4 SUCHITRA COMMENT ON BALAJI AND CASTE NETIZENS COMMENT MSB

பாலாஜி புகைப்படத்துடன் சாதி போட்டு சர்ச்சையில் சிக்கிய சுசித்ரா

சோஷியல் மீடியாவில் பாலாஜியின் புகைப்படத்துடன் சாதி குறித்து பதிவிட்ட சுசித்ரா நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

பாலாஜி புகைப்படத்துடன் சாதி போட்டு சர்ச்சையில் சிக்கிய சுசித்ரா
சுசித்ரா | பாலா
  • Share this:
தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா, போன வேகத்தில் வீடு திரும்பினார். பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாஜியுடன் மட்டும் அதிகமாக நட்பு பாராட்டி வந்த சுசித்ரா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போது, ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம், ரமேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும் பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஒரு குழுவாகவும் இருப்பதாக கருத்து தெரிவித்தார். மேலும் ஆரி, அனிதா, சனம் ஆகியோர் தனியாக செயல்பட்டதாகவும், ஆரி தான் கூறுவதை பொறுமையாக கேட்பார், நேர்மையானவர் என்று கூறினார்.

மேலும் சில காலம் சமூகவலைதளம் பக்கம் செல்லமாட்டேன் என்று கூறிய அவர் பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்த உள்ளதாக கமல்ஹாசனிடம் கூறினார். ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடனே சமூகவலைதளத்தின் பக்கம் திரும்பிய சுசித்ரா, தனது பதிவுகள் மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.




சமீபத்தில் பாலாஜியின் புகைப்படத்தை பதிவிட்ட சுச்சி, “எங்கள் ஜாதியே வேற” என்று குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியைப் பற்றி கூறுவதற்கு ஏன் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் வேறு ஏதாவது வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாமே என்று கமெண்ட் பதிவிட்டனர்.



அதற்கு பதிலளித்த சுசித்ரா, சாதியை எப்படி மாற்றமுடியும். அது ஏதோ ஒரு பொறாமை பிடித்தவர் கல்லில் செதுக்கிய கணக்கு. அதை தவறாக பார்க்க வேண்டாம். நான் சொன்னதை வேறு அர்த்தத்தில் பாருங்கள். நான் எப்போதும் திராவிட சாதி என்பதை பெருமையாக சொல்வேன்” என்றார்.மேலும் நான் யானை சாதி என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன் என்றும் ஏனெனில் அதுவும் உண்மை என்றும் சுசித்ரா பதிலளித்திருந்தார். அதைத்தொடர்ந்து சர்ச்சையான கமெண்டுகள் குவியவே கருத்து பதிவிடும் வசதியை ஆஃப் செய்து தனது பதிவிலும் எடிட் செய்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading