பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் ரீஎன்ட்ரி கொடுத்த போட்டியாளர்

பிக்பாஸ்

102-ம் நாளான நேற்று பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சத்துடன் கேபி வெளியேறினார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டிவிட்டதால், இதுவரை போட்டியில் பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அனைவரும் இறுதி போட்டியாளர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தனர். ஆனால் ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டுமே தற்போது வரை பிக்பாஸுக்கு வராமல் இருந்தார்கள். மேலும் 102ம் நாளான நேற்று (ஜன14) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கேபி வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா, கேபி என மொத்தம் ஆறு பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மட்டும் பிக்பாஸ் நேற்று ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். அதாவது, பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறும் வாய்ப்பு. இந்த டாஸ்க் ஒவ்வொரு சீசனிலும் நடத்தப்படும்.

ஆனால் இந்த முறை 1 லட்சத்தில் ஆரம்பித்து சில லட்சங்கள் கொண்ட பணப்பெட்டி போட்டியாளர்கள் முன்னிலையில் வைக்கப்படும் எனவும், அதை எந்த போட்டியாளராவது எடுத்துக் கொண்டு வெளியேறலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ரீஎன்ட்ரி கொடுத்த மற்ற போட்டியாளர்கள் யாரும் இது தொடர்பாக அறிவுரை கூற கூடாது என்றும் பிக் பாஸ் கேட்டுக்கொண்டார். அப்போது கேமராவில் பேசிய பாலாஜி முருகதாஸ் 1 கோடி ரூபாய் வந்தாலும் நான் அந்த பணத்தை எடுக்கமாட்டேன். வெற்றியோ தோல்வியோ இறுதி வரை இருப்பேன் என கூறினார்.

டாஸ்க் ஆரம்பித்தவுடன் முதலில் 1 லட்சம் ரூபாய் பெட்டி வந்தது. அதனை யாருமே எடுக்கவில்லை. அதற்கு பிறகு 5 லட்சம் ருபாய் பணத்துடன் பெட்டிவந்தது. அதை யாரும் எடுக்கமாட்டார்கள் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கேபி பணப்பெட்டியை எடுத்துக்கொண்டார். உடனே ரியோவும் வந்து அதை எனக்கு கொடுத்துவிடு நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். ஆனால் கேபி அதை கொடுக்க முன்வரவில்லை.

அந்த பெட்டியை அவர் கீழே கூட வைக்கவில்லை. நான் எடுக்கவில்லை என்றால் ரியோ அதை எடுத்துக்கொள்வார் என கூறினார். இந்த விளையாட்டில் நான் என்னை குறைவாக நினைக்கவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி ஒன்று இருக்கிறது. எனவே நான் வெளியே செல்ல முடிவு எடுத்துவிட்டேன் என கேபி கூறினார். உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என பிக்பாஸ் கேட்ட உடன், ஆம் என பதில் கூறிய கேபி போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் 103-ம் நாளான இன்று வெளியான ப்ரமோ காட்சிகளில் ஷிவானி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். ப்ரமோவில் இடம்பெற்றிருந்த காட்சிகளில், "பிக்பாஸ் ஹவுஸில் இருப்பவர்களுக்கு மதிய உணவு வந்திருந்தது. மேலும் அதனுடன் ஒரு பாயும் வந்துள்ளது. எதற்கு பாய் அனுப்பியிருக்கிறார்கள் என ஹவுஸ்மேட்ஸ் பார்த்தபொழுது, அதில் ஷிவானி இருந்தார். அவரைப் பார்த்த அனைவரும் மிகுந்த சந்தோசம் அடைத்தனர். இதுதான் அந்த சர்ப்ரைஸா என சோம் சிரித்தபடியே கேட்கிறார். ஷிவானியை பார்த்தவுடன் ரம்யா மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.ஷிவானி வந்திருப்பதை அறிந்த பாலா மிகுந்த ஆர்வத்துடன் ஷிவானியை காணச் சென்றுள்ளார். ஷிவானியோ கண்டும் காணாமல் அங்கிருந்து நழுவி அர்ச்சனாவிடம் சென்று விட்டார். ஷிவானி தன்னை கண்டுகொள்ளாமல் போனதால் மொக்கை வாங்கிய பாலா, அந்த இடத்தில் இருந்து விலகி செல்வது போல் ப்ரமோ காட்சிகள் அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைய இன்னும் 3 நாட்களே உள்ளன. மேலும், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: