இங்க பண்றது யாருக்கும் தெரியாதுனு நினைச்சியா - ஷிவானியிடம் அவரது அம்மா கேள்வி

இங்க பண்றது யாருக்கும் தெரியாதுனு நினைச்சியா - ஷிவானியிடம் அவரது அம்மா கேள்வி

பிக்பாஸ் தமிழ் 4

இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவானியின் தாயார் வந்திருக்கிறார்.

  • Share this:
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் கன்பெக்ஷன் ரூமில் நடைபெறாமல் போட்டியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு பிடிக்காத இருவரை நாமினேட் செய்தனர். இறுதியாக ஷிவானி, ஆஜித், ரம்யா, சோம் மற்றும் கேபி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக்பாஸ் கூறினார்.

இவர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிக்பாஸ் நேற்று ஹவுஸ்மேட்டுகளுக்கு ஒரு ஸ்பெஷல் டாஸ்க்கை கொடுத்தார். அதில் ஹவுஸ் ஒவ்வொருவராக முன்னின்று தங்களது சீட்டில் வந்த பெயர் இருப்பவர்கள் 2021ம் ஆண்டு எடுத்து செல்ல வேண்டிய நல்ல விஷயம் , எடுத்து செல்ல வேண்டாம் என நினைக்கும் கெட்ட விஷயத்தை கூற வேண்டும். அதன்படி ஆஜித் ஷிவானி குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அனைவரும் பேசினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணாமாக இந்த டாஸ்க் நடைபெறாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முன் நடந்த சீசன்களை போல இந்த வருடம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருவது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். ஷிவானி பாத்ரூம் ஏரியாவில் நின்ற போது ஃப்ரீஸ் என பிக்பாஸ் கூறுகிறார். அப்போது அவரது அம்மா கதவு வழியாக உள்ளே அனுப்பப்படுகிறார்.

ஷிவானி கண்கலங்கி ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். அதன் பின் கார்டன் ஏரியாவில் அமர்ந்து இருவரும் தனியாக பேசுகின்றனர். அப்போது ஷிவானியின் அம்மா, "எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்த? நீ என்ன இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருந்தனு வெளியே யாருக்கும் தெரியாதுனு நெனைச்சிட்டு இருக்கியா" என கோபமாக பேசுகிறார். இதனை கேட்ட ஷிவானி, அதிர்ச்சியடைந்தவாறு அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பாலாஜி - ஷிவானி ஒன்றாக சுற்றி வருகின்றனர். கடந்த வாரம் கூட பாலாஜி, ஷிவானிக்கு ஃபேவரிசம் காட்டியதாகவும், ஷிவானி, பாலாஜியின் நிழலில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.பிக் பாஸ் வீட்டில் குறைந்த ஈடுபாடு மற்றும் போட்டித்திறன் இருப்பதாக ஷிவானி மீது விமர்சனங்கள் உள்ள நிலையில் அவர் இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானியின் அம்மாவை தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வருவார்கள் என்பதால் இந்த வாரம் முழுதுவம் இந்த டாஸ்க் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: