வெளியே சென்று திரும்பிய பின் பாலாவை நலம் விசாரித்த ஷிவானி

பிக்பாஸ்

கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷிவானி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

  • Share this:
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 102-ம் நாளான நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கேபி 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, தற்போது, ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா என மொத்தம் 5 பேர் இறுதி போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் 100ம் நாள் நிறைவையொட்டி, இந்த போட்டியில் கலந்துகொண்டு வெளியேறிய சக போட்டியாளர்கள் அனைவரும் ரீஎன்ட்ரி கொடுத்தனர்.

இருப்பினும், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஷிவானி ஆகியோர் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரவில்லை. இந்த நிலையில் 103ம் நாளான இன்று வெளியான ப்ரமோ காட்சிகளில் ஷிவானி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அது தொடர்பாக வெளியான முதல் ப்ரோமோவில் இடம்பெற்றிருந்த காட்சிகளில், "பிக்பாஸ் ஹவுஸில் ஸ்டோர் ரூமில் மதிய உணவு வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதனுடன் ஒரு பாயும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. எதற்கு பாய் அனுப்பியிருக்கிறார்கள் என ஹவுஸ்மேட்ஸ் பார்த்தபொழுது, அதில் ஷிவானியை பேக் செய்து அனுப்பியிருக்கிறார் பிக்பாஸ்.

அவரை பார்த்த அனைவரும் மிகுந்த சந்தோசம் அடைந்துள்ளனர். இதுதான் அந்த சர்ப்ரைஸா என சோம் சிரித்தபடியே கேட்கிறார். ஷிவானியை பார்த்தவுடன் ரம்யா மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். ஷிவானி வந்திருப்பதை அறிந்த பாலா மிகுந்த ஆர்வத்துடன் ஷிவானியை காண சென்றுள்ளார். ஷிவானியோ கண்டும் காணாமல் அங்கிருந்து நழுவி அர்ச்சனாவிடம் சென்று விட்டார். ஷிவானி தன்னை கண்டுகொள்ளாமல் போனதால் சற்று வருத்தத்துடன் இருந்த பாலா, அந்த இடத்தில் இருந்து விலகி சென்றார்.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது ப்ரமோவில், ஷிவானி, சனம் செட்டி, வேல்முருகன், ரேகா ஆகியோர் கார்டன் ஏரியாவில் நின்று பேசிக்கொண்டிருப்பது போல இருக்கிறது. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் ரம்யா மற்றும் ஷிவானி இருவரும் கடுமையாக போராடிய ரோப் டாஸ்க் பற்றி பேசிக்கொண்டிருந்த ரேகா, "சிங்கபெண்ணே... பாடலுடன் உங்க போட்டியை பார்க்கும் போது மிகவும் அருமையாக இருந்தது" எனக் கூறினார்.அதற்கு பதிலளித்த ஷிவானி " அது மிகவும் கடினமான டாஸ்க்" என்கிறார். அப்போது அங்கு வந்த பாலாஜியை பார்த்து எப்படி இருக்க? எனக் கேட்கும் ஷிவானியிடம் பாலாஜி புன்னகைத்தபடி நல்லா இருக்கேன் என பதிலளிக்கிறார். இருப்பினும் பாலா பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருந்ததால், ஏன் டல்லா இருக்க, உடம்பு சரியில்லையா என ஷிவானி நலம் விசாரிக்கிறார். தொடர்ந்து வந்ததில் இருந்து நீ டல்லாக இருப்பது போல இருந்தது என ஷிவானி கேட்க, அதற்கு பதிலளித்த பாலாஜி "இல்லை. நான் நன்றாக இருக்கேன்.. ஆல் குட்" என்கிறார். அப்படியே ஷிவானி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடுகிறார்.
Published by:Sheik Hanifah
First published: