பாலாஜிக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்த ஷிவானி - பல்பு கொடுத்த கேப்ரில்லா

பாலாஜிக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்த ஷிவானி - பல்பு கொடுத்த கேப்ரில்லா

பிக்பாஸ்

‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ டாஸ்க்கில் பாலாஜிக்கும் கேப்ரில்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் வேடிக்கையான டாஸ்க் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று வழங்கிய 'பாட்டி சொல்லைத் தட்டாதே' என்ற டாஸ்க் இன்றும் தொடர்வது முதல் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் அர்ச்சனா பாட்டியாக உள்ளார். ஆரி - சுஜித்ரா, ரியோ - நிஷா, சோம் - ரம்யா ஆகியோர் ஜோடிகள். மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவர்களுடைய பிள்ளைகள்.இவர்கள் பாட்டியை சந்தோஷப்படுத்தி சொத்தை பெற வேண்டும். ரம்யா - சோம் - கேபி அந்த பத்திரத்தை திருட வேண்டும் என்பது தான் டாஸ்க்.

சோம் பீரோவில் இருந்த சொத்து பத்திரத்தை திருடிய நிலையில் அந்த பத்திரத்தை பாலாஜி கைப்பற்றியுள்ளார். இதனால் பாலாஜி - கேபிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையால் கேபிக்கும் - ஷிவானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது.படிக்க: நடிகைகளின் சம்பள பட்டியல் - முதலிடத்தில் நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?

அதில் நேர்மையாக பதில் அளிக்குமாறு கூறினேன். நீயும் சொல்லிவிட்டாய் அதன் பின்னர் நான் எதுவும் கூறவில்லை என கேப்ரில்லா பாலாஜியிடம் கூறுகிறார். அப்போது குறுக்கிட்ட ஷிவானி நேர்மையாக எதற்கு பதிலளிக்க வேண்டும்? என கேட்கிறார். அதற்கு கேப்ரில்லா, நான் அவனிடம் தான் பேசினேன். அப்படித் தான் சத்தமாக பேசுவேன் என கோவமாக கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் கேப்ரில்லா முதல்முறை அதிரடியாக பேசியதால் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் ஆதரவாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் சண்டைகளுக்கு நடுவே நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா என ரியோ ஆரம்பித்து வெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4 என காமெடி செய்வதும் காட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெளியான மூன்றது புரோமோவில் மற்றொரு வேடிக்கையான டாஸ்க் வழங்கப்படுகிறது. ஹவுஸ் மேட்ஸ் ஜோடியாக பிரிந்து விளையாட வேண்டும்.

செங்கலின் மீது ஒருவர் நடக்க வேண்டும். அவருடைய ஜோடி செங்கலை விரைவாக நகர்த்தி உதவ வேண்டும். எந்த ஜோடி குறைவான நேரத்தில் இலக்கை அடைகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். இந்த டாஸ்கில் ரியோ - நிஷா, ஆரி - சுசித்ரா, பாலாஜி - ஷிவானி, சோம் - ரம்யா, கேப்ரில்லா - ஆஜித், சனம் - ரமேஷ் ஆகியோர் ஜோடியாக உள்ளதால் இன்றைய நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கடுகிறது.
Published by:Sheik Hanifah
First published: