ஷிவானி அம்மாவின் செயலால் மனமுடைந்து கண்கலங்கிய பாலாஜி - என்ன நடந்தது?

ஷிவானி அம்மாவின் செயலால் மனமுடைந்து கண்கலங்கிய பாலாஜி - என்ன நடந்தது?

பாலாஜி முருகதாஸ்

ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் குற்ற உணர்ச்சியால் கண்கலங்கியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

  • Share this:
84 நாட்களைக் கடந்திருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது ஆரி, ஆஜித், ரம்யா, ரியோ, சோம், கேபி, ஷிவானி, பாலாஜி ஆகிய 8 பேர் உள்ளனர். இதில் ஷிவானி மற்றும் ஆஜித் குறைவான ஈடுபாடுடன் உள்ளதாகவும் தங்கள் கருத்துக்களை முன் வைக்க தவறியதாகவும் மற்ற போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சமூகவலைதளத்தில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்த ஷிவானி,
80 நாட்களை கடந்தும் பிக்பாஸ் வீட்டிற்குள் பெரிதாக எந்தவித டாஸ்க்குகளையும் செய்யாதது அவர் மீது பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பாலாஜி - ஷிவானி இருவரும் ஒன்றாக சுற்றி வருவது, உணவு ஊட்டி விடுவது என இருக்கும் ஷிவானி மற்ற போட்டியாளர்களுடன் அதிகம் பேசியது கூட இல்லை.

அதேபோல் பாலாஜிக்கும் ஷிவானி மீது தனிப்பட்ட அக்கறை இருப்பதும் உண்மையே. கடந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கில் கூட பாலாஜி, ஷிவானிக்கு மட்டும் ஆதரவாக இருந்தார். இதனை அனிதா சுட்டி காட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஷிவானி தனது தனி திறமையை காட்டாமல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுபோன்ற காரணங்களால் தான் ஷிவானி இந்த வாரமும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது இன்று வெளியான முதல் ப்ரமோவில் காட்டப்பட்டிருந்தது. அதில் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் நிலையில் ஷிவானி கண்கலங்கி ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுகிறார்.

அதன் பின் கார்டன் ஏரியாவில் அமர்ந்து இருவரும் தனியாக பேசுகின்றனர். அப்போது ஷிவானியின் அம்மா, "எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்த? நீ என்ன இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருந்தனு வெளியே யாருக்கும் தெரியாதுனு நெனைச்சிட்டு இருக்கியா" என கோபமாக பேசுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத ஷிவானி, அதிர்ச்சியடைந்தவாறு அமைதியாக இருக்கும் காட்சிகள் இருந்தன.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், ஷிவானி அம்மா வருகை தந்தது குறித்து பாலாஜி மற்றும் ரம்யா பேசி கொண்டிருக்கின்றனர். ஷிவானியின் ரியாக்சன் வெளியே வந்திருக்கும் என நினைக்கிறேன். உங்களை எதுவும் ஷிவானி அம்மா கூறவில்லை. அவரைத்தான் "தனிப்பட்ட முறையில் நீ ஏன் ஒரு முறை கூட, உன் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லை. அதற்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம்" என்று கூறியதாக ரம்யா விளக்குகிறார்.இதன் பின்னர் ஆஜித்திடம் பேசிக் கொண்டிருக்கும் பாலாஜி, ஷிவானியின் அம்மாவே வந்து அவரது செயல் குறித்து குறை கூறுகையில், அதில் நானும் சம்பந்தப்பட்டுள்ளேன். இதெல்லாம் என்னால் தான் என்பதை நினைத்தால் குற்றஉணர்ச்சியாக உள்ளது. ஷிவானியை திட்டி விட்டு என்னிடம் எதுவும் கேட்காமல் சென்றது கஷ்டமாக உள்ளது எனக் கூறி கண்கலங்கி அழுகிறார். இதனால் பாலாஜி - ஷிவானி இடையே விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: