பாலாஜிக்கு இனி பிரச்னையில்லை... பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்

பாலாஜிக்கு இனி பிரச்னையில்லை... பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்

பாலாஜி | சனம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வேல்முருகன், ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டு 13 பேர் மீதமிருக்கின்றனர். இவர்களில் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி என 7 பேர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இடம்பிடித்தனர்.

இவர்களில் நடிகை சனம் ஷெட்டி குறைவான வாக்குகளைப் பெற்று 6-வது நபராக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் வீட்டுக்கு வந்து 60 நாட்களில் உங்களது பங்களிப்பு எப்படி இருந்தது என பிக்பாஸ் கேட்க, கிட்டத்தட்ட அனைவருமே பதில் தெரியாமல் முழித்தனர்.

அதேபோல் கால் சென்டர் டாஸ்க்கில் தனக்கு கிடைத்த ஒரே ஒரு போன் காலில் தான் சிறப்பாக செயல்பட்டதாக சனம் வாதிட்டார். அவருக்கு ஆரியும் ஆதரவளித்தார். இதனிடையே ஒரு கட்டத்தில் பாலாஜி, சனம் பேசிக்கொண்டிருந்த போது செருப்பை எடுத்து தனது முகத்தில் அடித்துக் கொண்டு இனி பேசமாட்டேன் என சனம் ஷெட்டியிடம் கூறி விடை பெற்றார் பாலாஜி. அதையும் இன்றைய எபிசோடில் பேசியிருக்கும் கமல்ஹாசன் பாலாஜியை கடிந்து கொண்டதாக ப்ரமோ வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: பிக்பாஸ் கவினுக்கு கல்யாணமா? மணப்பெண் பற்றி வெளியான தகவல்

பிக்பாஸ் ஆரம்பித்த நாளிலிருந்தே மாடலிங் துறையைச் சேர்ந்த சனம் ஷெட்டி - பாலாஜிக்கு இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் எழுந்த வண்ணம் தான் இருந்தன. இந்நிலையில் இந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டால் பாலாஜிக்கு இனி பிரச்னை இருக்காது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: