சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் பிக்பாஸ் சம்யுக்தா... திடீரென வைரலாகும் வீடியோ

சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் பிக்பாஸ் சம்யுக்தா... திடீரென வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் சம்யுக்தா

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் சம்யுக்தா சன் டிவி சீரியலில் நடித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

  • Share this:
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தவர் என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள்.

ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலில் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சம்யுக்தா நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் நடித்த சந்திரகுமாரி சீரியலின் எபிசோட்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

ராடான் மீடியா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்த ‘சந்திரகுமாரி’ சீரியல் சரித்திர கால பெண்ணாகவும், தற்காலத்து பெண்ணாகவும் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார் ராதிகா. சரித்திர காலத்து கதையை ‘பாட்ஷா’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும், நிகழ்காலக் கதையை சி.ஜே.பாஸ்கரும் இயக்கினார்கள். 2018-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ சீரியல் 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்தது. மிகக் குறுகிய காலமே இந்த சீரியல் ஒளிபரப்பானது.மேலும் படிக்க: தீராத மோதல்.. கோபப்படும் அனிதா சம்பத், கடுப்பான ரியோ..

ராதிகா, விஜி சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த சீரியலில் பிக்பாஸ் போட்டியாளரான சம்யுக்தா கார்த்திக் ருத்ரா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களுடன் ஒட்டாமல் இருந்த சம்யுக்தா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து ஆரியுடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவற்றால் கடந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருந்தார் சம்யுக்தா. இதனிடையே அவர் நடித்த ‘சந்திரகுமாரி’ சீரியலின் எபிசோட்கள் சமூகவலைதளங்களில் திடீரென வைரலாகியுள்ளன.
Published by:Sheik Hanifah
First published: