பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கேபி... ரியோ மனைவி நெகிழ்ச்சி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று கேபி வெளியேறிய நிலையில் ரியோ ராஜின் மனைவி நெகிழ்ச்சியாக கருத்து பதிவிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டிவிட்டதால், இதுவரை போட்டியில் பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அனைவரும் இறுதி போட்டியாளர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தனர். ஆனால் ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டுமே தற்போது வரை பிக்பாஸுக்கு வராமல் இருந்தார்கள். மேலும் 102ம் நாளான நேற்று (ஜன14) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கேபி வெளியேறியுள்ளார்.

அப்போது பேசிய சக போட்டியாளர்களிடம் பேசிய கேபி, இந்த விளையாட்டில் நான் என்னை குறைவாக நினைக்கவில்லை. நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி ஒன்று இருக்கிறது. எனவே நான் வெளியே செல்ல முடிவு எடுத்துவிட்டேன் என்று கூறினார். கடைசிவரை கேபியின் பணப்பெட்டியை கீழேவைக்கச் சொல்லி போராடிய ரியோ அவர் வெளியேற முடிவெடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால் கேபி தனது முடிவில் உறுதியாக நின்றார்.

பின்னர் சோமிடம் தனியாக அமர்ந்து பேசிய கேபி, “நான் இந்த பணப்பெட்டியை எனக்காக எடுக்கவில்லை. நான் எடுக்கவில்லை என்றால் ரியோ எடுத்துவிடுவான் அதனால்தான் நான் முந்திக் கொண்டேன் அந்த பெட்டியை நோக்கி செல்லும் போது எனக்கு அந்த அளவுக்கு வருத்தமாக இருந்தது. நான் ஒரு பத்து வினாடிகள் தாமதம் செய்திருந்தால் கூட ரியோ அதை எடுத்திருப்பான். ரியோ அந்த பெட்டியை எடுக்க கூடாது என்பதற்காகத்தான் நான் முந்திக் கொண்டு அதை எடுத்தேன்” என்றார். இதன் மூலம் அவர் ரியோவைக் காப்பாற்றத்தான் பணப்பெட்டியை எடுத்தார் என்பது தெரிந்தது.இந்நிலையில் ரியோவின் மனைவி நெகிழ்ச்சியாக லவ் யூ கேபி என பதிவிட்டு தனது குழந்தைக்கு கேபி தைத்துக் கொடுத்த உடையை அணிவித்திருக்கிறார். மேலும் ரியோவுக்கு நல்ல தங்கை கிடைத்திருப்பதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ரியோவின் மனைவி கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: