பிக்பாஸ்: ஆரி மீது குறைகளை அடுக்கும் சோம் மற்றும் ரியோ

பிக்பாஸ்: ஆரி மீது குறைகளை அடுக்கும் சோம் மற்றும் ரியோ

பிக்பாஸ் தமிழ் 4

ஆரி மீது சோம் சேகர், ரியோ ஆகியோர் குறை கூறுவதைக் கேட்டு சிரிக்கிறார் பாலாஜி முருகதாஸ்

  • Share this:
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இன்னும் போட்டி முடிவடைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக செல்வதற்கான ‘டிக்கெட் டு பினாலே’ டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்திறமையுடன் விளையாடி வருகின்றனர். இதுவரை 4 டாஸ்க்குகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதில் ரம்யா முதலிடத்திலும், கேபி கடைசி இடத்திலும் உள்ளார்.

இன்று காலை வெளியான ப்ரமோவில், ஐந்தாவது டாஸ்க் நடைபெறுவதும், அதில் ரியோ முதலிடம் மற்றும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ரியோ மற்றும் சோம் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பாலாஜி குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பாலாஜி பழைய பாலாஜியாக மாற வேண்டும் என்று வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் பழைய பாலாஜியை காணவில்லை என சொன்னதால்தான் என்று அப்படி மாறி விட்டான் என்று சோம் வருத்தப்பட்டு கூறுகிறார்.

கோபம், சண்டைகளை தவிர்த்து பார்த்தால் பாலாஜி நன்றாக தான் விளையாடினான் என சோம் கூற , அதனை மறுத்த ரியோ ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பின்னரே அவன் நன்றாக விளையாட ஆரம்பித்தான் என்கிறார். அதற்கு சோம், அனைவரும் சிறு சிறு தவறுகள் செய்துள்ளோம். அவனை மட்டும் குறை சொல்லக் கூடாது, அவனை விடவும் கொஞ்சம் அதிகமாக சிலரிடம் உள்ளது. நான் யாரென சொல்ல விருப்பவில்லை என்கிறார். பிக்பாஸ் நிக்ழ்ச்சி தொடங்கியதில் இருந்து யாருக்கும் அடங்காமல் ஒருவித திமிருடன் பாலாஜி விளையாடி வந்தார்.

பின்னர் கமல் கொடுத்த அறிவுரைகள் பேரில் தன்னை மாற்றி கொண்டு அமைதியாக மாறினார். ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பாலாஜியின் சகோதரர், பழைய பாலாஜியாக மாற வேண்டும் என்று சொன்னார். இதனால் பாலாஜி மீண்டும் மாறியதற்கு கடந்த வாரம் ஆரியுடன், ஏற்பட்ட மோதலே உதாரணம். ஆனால் எப்படி கோபப்பட்டாலும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ‘டிக்கெட் டு பினாலே’ டாஸ்க்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில், போட்டியாளர்கள் குறித்து குறைகளை கூறுமாறு டாஸ்க் வழங்கப்படுவதாக தெரிகிறது. அப்போது முதலில் வரும் சோம், “குறை சொல்லும் டாஸ்க் இப்போது தான் வந்துள்ளது. ஆனால் ஆரி வந்த நாள் முதல் மற்றவர்களை குறை கூறி விளையாடுகிறார். மற்றவர்கள் குறித்து என்னிடம் நீ குறை கூறியுள்ளாய். அதேபோல மற்றவர்களிடமும் என்னைப்பற்றி கூறி இருக்கமாட்டாய் என்பதற்கு என்ன நிச்சயம்” என்கிறார்.அப்போது குறுக்கிட்ட ஆரி, எல்லாரும் எல்லார் குறித்தும் பேசி இருப்பார்கள் என கூறுகிறார். இதனை கேட்ட பாலாஜி சிரித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வந்த ரியோ, ஆரி சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சுருக்கமாகக் கூறினால் நன்றாக இருக்கும். அதேபோல மற்றவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளை செய்தால் அவர் வாழ்க்கை இன்னும் அழகாகும் என்கிறார். ரியோவின் கருத்தை ஏற்றுக்கொள்வது போல ஆரி தலையசைக்கிறார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: