காதல் கண்ணை மறைக்குதா? ரியோ - பாலாஜி இடையே மோதல்

காதல் கண்ணை மறைக்குதா? ரியோ - பாலாஜி இடையே மோதல்

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் வீட்டில் பாலாஜிக்கு காதல் கண்ணை மறைப்பதாக நடிகர் ஆரி தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளதாக தெரிகிறது.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனிதா, அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், ஆரி, சனம், சம்யுக்தா, சுசித்ரா, பாலாஜி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா மற்றும் ஆஜித் ஆகிய 15 பேர் உள்ளனர். இதுவரை நடிகை ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஸ் வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று தொடங்கியுள்ள நிலையில், இன்றைய முதல் புரோமோவில் அனிதா, சுசித்ராவை பெரும்பாலானோர் நாமினேட் செய்திருந்தனர். மேலும் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி நாமினேட் செய்துகொண்ட நிலையில், பாலாஜியின் காதல் அவரது கண்ணை மறைக்கிறது என ஆரி கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது புரோமோவில், நான் சிங்கில் போகிறார்கள், சிடு மூஞ்சி, காதல் கண்ணை மறைக்கிறது என்ற காரணங்களால் இந்தவாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த பாலாஜி “கேட்டுக்கங்கப்பா இங்க காதல் எல்லாம் ஒன்னும் பண்ணல. அது போன்ற எண்ணம் இருந்தால், அது பற்றி நான் காதில் கேட்டால், ஏதாவது கேட்பேன்” என அனைவரிடமும் கூறிவிட்டு கோபத்துடன் கிளம்பி செல்கிறார். அதன் பின் பெட்ரூமில் ஷிவானியிடம், ‘சப்போஸ் காதல் வந்தா நான் உன் கிட்ட சொல்றேன் சரியா. ஆனால் வராது. வந்தால் சொல்றேன்’ என்று கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன்.

மூன்றாவது புரோமோவில், பாலாஜி கோவமாக பேசியது குறித்து ரியோ, சமையலறையில் பேசுகிறார். அப்போது யாரோ ஒருவர் நாமினேட் செய்ததற்கு அனைவரையும் பாலாஜி அப்படி கூறியது தவறு. அனைவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் நிலையில் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிறார்.மேலும் நாம் ஒன்னும் சின்ன பசங்கள் அல்ல விளையாட்டிற்கு என்ன வேண்டுமானாலும் கூற என்று ஆஜித், சோம், கேபி, அர்ச்சனா ஆகியோரிடம் ரியோ கூறுகிறார். மறுபுறம் கண்ண மறைக்கிற அளவிற்கா காதல் பண்ணி சுத்திட்டு இருக்கேன், எனக்கும் வெளியே மரியாதை உள்ளது. நான் என்ன இங்கு லவ் பண்ணவா வந்திருக்கிறேன் என பாலாஜி கோவமாக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஆரி கூறிய கருத்தால் பிக்பாஸ் வீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Published by:Sheik Hanifah
First published: