பிக்பாஸ் ஃபைனலுக்கு முன் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் ஃபைனலுக்கு முன் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ்

பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.

  • Share this:
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் இப்போது ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகிய 6 பேர் மீதமிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

6 பேரில் நடிகர் ஆரிக்கு பார்வையாளர்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்று போட்டியிலிருந்து விலகினார்.

இந்த சீசனிலும் அப்படி குறிப்பிட்ட தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தமுறை நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் கொடுக்கும் தொகையைப் பெற்றுக் கொண்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அன்று வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

மேலும் படிக்க: Master Twitter Review | சந்தும் பொந்தும் சரவெடி.. முதல் பாதி அதிரடி... இணையத்தை கலக்கும் மாஸ்டர் விமர்சனம்

இந்த வாரம் முழுக்க ஏற்கெனவே எவிக்ட் செய்யப்பட்ட இந்த சீசனின் போட்டியாளர்கள் வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று வீட்டுக்கு வந்த அனிதா சம்பத்தை வரவேற்ற சக போட்டியாளர்கள் தந்தையின் இழப்பிலிருந்து மீண்டு வர ஆறுதல் கூறி வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: