ஆரி மீது அனைத்தையும் இறக்கி வைத்த ரம்யா பாண்டியன் - சோம், கேபி இடையே கடுமையான போட்டி

ஆரி மீது அனைத்தையும் இறக்கி வைத்த ரம்யா பாண்டியன் - சோம், கேபி இடையே கடுமையான போட்டி

ரம்யா பாண்டியன் | ஆரி

ஆரி மீது தான் மனதில் நினைத்திருந்த அத்தனையும் கொட்டித் தீர்த்திருக்கிறார் ரம்யா பாண்டியன்.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த வாரம் வீட்டில் இருக்கும் 7 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு, மீதமிருக்கும் 6 பேரில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

இறுதிச் சுற்றுக்கு நேரடியாக செல்வதற்கான ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் இந்த வாரம் முழுக்க நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெரும் நபர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார் என்பதால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்திறமையுடன் விளையாடி வருகின்றனர்.

அதற்காக இதுவரை 6 டாஸ்க்குகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. நேற்று நடைபெற்ற 5-வது டாஸ்க்கில், ஒரு பந்தை வளையத்திற்குள் வைத்து சுற்றி கொண்டே இருக்குமாறு பிக்பாஸ் கூறினார். வளையத்தில் இருக்கும் பந்து நின்றுவிட்டாலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ அவர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். யார் கடைசி வரை வளைத்ததில் பந்தை சுற்றிக்கொண்டே இருக்கிறாரோ அவரே வெற்றியாளர். அதன்படி அனைவரும் நிற்க ஒரு மேடை அமைக்கப்பட்டு அதன் மேலே நின்று போட்டியாளர்கள் பந்தை சுற்றினர். இதில் முதலில் ஷிவானி, பந்தை கீழே விட்டதால் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ஆரி, ரம்யா, கேபி , சோம் ஆகியோர் பந்தை வளையத்திலிருந்து தவற விட்டு வெளியேறினர். இறுதியாக ரியோ, பாலாஜி இருந்த நிலையில் அவர்களை கீழே இறங்குமாறும், மேலே ஏறுமாறும் அவ்வப்போது பிக்பாஸ் அறிவித்தார். இந்த டாஸ்கில் ரியோ முதலிடத்தையும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆறாவது டாஸ்க்கில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களின் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் பிக்பாஸ். முதல் ஆளாக ஆரி, அனைவர் மீதும் இருக்கும் குறைகளை எடுத்துக் கூறினார். பாலாஜிக்கு வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார். மேலும் "உன் வயதில் நான் வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்து கொண்டிருந்தேன். நீயும் மிஸ் இந்தியா வென்று கஷ்டப்பட்டு தான் உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறாய். பல இடங்களில் கோபப்பட்டு நீ மற்றவர்கள் பேசுவதை கேட்பதே இல்லை அதை மாற்றிக்கொள் என ஆரி கூறினார்.

ஷிவானியை தன்னம்பிக்கையுடன் விளையாடுமாறு கூறினார். பின்னர் சோம் பேசினார், அப்போது “குறை சொல்லும் டாஸ்க் இப்போது தான் வந்துள்ளது. ஆனால் ஆரி வந்த நாள் முதல் மற்றவர்களை குறை கூறி விளையாடுகிறார். மற்றவர்கள் குறித்து என்னிடம் நீ குறை கூறியுள்ளாய். அதேபோல மற்றவர்களிடமும் என்னைப்பற்றி கூறி இருக்கமாட்டாய் என்பதற்கு என்ன நிச்சயம்” என்கிறார். மேலும் ஆரியை பிக்பாஸ் வீட்டின் கேமரா என விமர்சித்தார்.

ரியோ சொல்லும் போது, ஆரி சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும், ஆரி பேசும் விஷயத்தை சுருக்கமாக பேசி முடித்தால் அவர் முன் யாருமே நிற்க முடியாது. அதேபோல மற்றவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும் என எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளை செய்தால் அவர் வாழ்க்கை இன்னும் அழகாகும் என்கிறார்.

ரம்யா பேசும்போது ஆரி, குறித்த குற்றச்சாட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கினார். 'ஆரி தான் விளையாடுவது மட்டும் தான் சரி என நினைக்கிறார், அது தவறில்லை ஆனால் மற்றவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிறார். அடுத்தவர்கள் மீது குறை கண்டுபிடிப்பதே அவரது பிளஸ் என நினைக்கிறார்.

வீட்டில் இரண்டு குரூப் உள்ளது. வீட்டில் ஒருவர் மற்றவர்களை மூளைச்சலவை செய்ய முயற்சிக்கிறார் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் பல கோடி மக்களை அப்படி செய்ய முயற்சி செய்கிறீர்கள் என நான் சொல்கிறேன் என ஆரியை கடுமையாக விமர்சித்தார் ரம்யா. மேலும் பாலாஜி பேசும்போது 'ஆரி அடுத்தவர்கள் நெகட்டிவ் வைத்து விளையாடாதீர்கள். உங்களது பாசிட்டிவ் உடன் விளையாடுங்கள்' என கூறினார்.

ரியோ குறித்து பேசுகையில் குழப்பமாக இருப்பதாக தெரிவித்தார். ரம்யாவிற்கு உங்கள் நண்பர்கள் தவறு செய்தால் அதை எடுத்து கூறுவதில்லை. நானும் உங்களுக்கு நண்பன் என கூறினார். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்குள்ளாகவே வரிசைப்படுத்திக் கொள்ளவேண்டும் என பிக்பாஸ் கூறினார். அதில் வாக்குகளின் அடிப்படையில் ஆரிக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டது. இதில் முதலிடத்தில் சோம், 2ம் இடத்தில் ஷிவானி, 3ம் இடத்தில் கேபி, 4ம் இடத்தில் ரம்யா, 5ம் இடத்தில் ரியோ, 6ம் இடத்தில் பாலாஜி இருந்தனர். இதுவரை நடைபெற்ற 6 டாஸ்குகளின் அடிப்படையில் ஹவுஸ் மேட்ஸ் பெற்ற மதிப்பெண்கள் விவரம் - ரியோ - 29, ரம்யா - 27, ஷிவானி - 26, பாலாஜி - 25, சோம் - 25, ஆரி - 20, கேபி - 16 ஆகும்.இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில், 7-வது டாஸ்க் நடைபெறுகிறது. அதில் ஹவுஸ் மேட்ஸ் 2 வளையங்களுக்கு நடுவில் பந்துகளை மாற்றி மாற்றி உருண்ட கொண்டே சென்று வைக்க வேண்டும். இதில் இரண்டு இரண்டு பேராக பங்கேற்க டாஸ்க் நடைபெறுகிறது. இறுதியாக சோம், கேபி விளையாடும் நேரத்தில் இருவரும் ஒரே நேரத்தில் டாஸ்க்கை நிறைவு செய்வதால் மூன்றாவது நடுவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இதில் யார் வெற்றிபெறுவார் என இன்றைய நிகழ்ச்சியில் தெரிவரும்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: