ரம்யாவை முதலிடம் பெறச்செய்த மாஸ்டர் விஜய்... இறுதிவரை போராடும் ரியோ ராஜ்

ரம்யாவை முதலிடம் பெறச்செய்த மாஸ்டர் விஜய்... இறுதிவரை போராடும் ரியோ ராஜ்

ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக செல்வதற்கான டிக்கெட்டை பெற போட்டியாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

  • Share this:
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது ஆரி, ரியோ, சோம், கேபி, ரம்யா, ஷிவானி மற்றும் பாலாஜி ஆகிய 7 பேர் உள்ளனர். பிக் பாஸ் 4 முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடுமையாகவே மாறி இருக்கிறது.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ‘டிக்கெட் டு பினாலே டாஸ்க்’ கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் டாஸ்க்குகளில் மும்முரமாக விளையாடி வருகின்றனர். முதல் நாள் இரண்டு டாஸ்க்குகள் நடைபெற்ற நிலையில், நேற்று மூன்றாவது மற்றும் நான்காவது டாஸ்க்குகள் நடைபெற்றன.

மூன்றாவது டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு முதுகில் ஒரு பேட்ச் அணிந்து கொள்ள வேண்டும் என்றும், ஒலி ஒலித்த பின்னர் ஒருவர் மற்றொருவர் முதுகில் இருக்கும் பேட்ஜை எடுக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். அப்போது முதலில் பாலாஜி ரியோவை குறிவைத்து அவரது பேட்ஜை எடுத்துவிட்டார்.

ரியோ கடந்த இரண்டு டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் அவரை முதலில் குறி வைத்ததாக பாலாஜி கூறினார். சோம், கேபியின் முதுகில் இருந்த பேட்ஜை கைப்பற்ற ரம்யா, சோமின் பேட்ஜை எடுத்துவிட்டார். பின்னர் ஆரியை, பாலாஜி குறிவைத்தபோது அவர் ஓடத் தொடங்கினார்.

ஓடுவது உங்கள் வியூகம் என்றால் நானும் அதை செய்வேன் என சொல்லி வேகமாக சென்று சேர், டேபிள் என அனைத்தையும் கொண்டு சென்று நீச்சல் குளம் அருகில் வைத்தார். இப்படி விளையாட நான் தயாராக இல்லை என சொல்லி தன் பேட்ஜை பாலாஜிக்கு கொடுத்துவிட்டார் ஆரி. அதன் பின் இப்படி விளையாடினால் அடிபடும் என்று தான் டேபிளை போட்டேன் என பாலாஜி வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.

அதற்கு ஆரி 'நீ ஆம்பள பையன் தானே ஓடிப்பிடித்து விளையாடலாமே' என கேட்டுவிட்டார். இதனால் கடுப்பான பாலாஜி நீங்கள் வார்த்தையால் காயப்படுத்துகிறீர்கள், எனக் கூறிவிட்டு உள்ளே சென்று கேமரா முன்பு நின்று புலம்பினார்.

அப்போது "நான் ஆம்பளை பையனா என்று கேட்டது தவறு என்று அங்கிருந்த ஒருவர் கூட சொல்லவில்லை. நீ ஆம்பள பையன் தானே என கேட்டால் யாருக்கு தான் கோபம் வராது? ஆனால் நான் கோபப்பட மாட்டேன்" என கூறிக்கொண்டார். இதனைத் தொடந்து நடைபெற்ற நான்காவது டாஸ்க்கில் ஒரு பாடலின் இசை ஒலிக்கப்படும். அப்போது ஹவுஸ் மேட்ஸ் பஸரை அழுத்தி பல்லவியை பாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அதில் முதலில் ஷிவானி சரியாக அழுத்தி விட்டு பாடினார். இரண்டாவது இசை ஒலித்தபோது கேபி, ஷிவானி, பாலாஜி மூவரும் ஒரே நேரத்தில் அழுத்தி விடுகின்றனர். இதனால் முதலில் யார் பஸரை அழுத்தியது என வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது கேபி நான் பாடப்போகிறேன் எனக்கூறி பாடி விடுகிறார். இதனால் கடுப்பான பாலாஜி, இது சரியல்ல எங்களிடம் கூறிவிட்டு கூட நீ பாடியிருக்கலாம் எனக் கூறினார்.

பின்னர் பஸரை அழுத்திவிட்டு ஏராளமான பாடல்கள் தெரியாமல் பாலாஜி முழித்தார். அதனால் அவரால் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்த டாஸ்க் இறுதியில் ஆரி, சோம் மற்றும் ரம்யா ஆகியோர் ஒரே மதிப்பெண் பெற்றதால் டை ப்ரேக்கர் சுற்று வைக்கப்பட்டது. அப்போது மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தான் வந்தது. அதை ரம்யா சரியாக கண்டுபிடித்துவிட்டார். இதனால் தளபதி தான் காப்பாத்துனாரு என இறுதியில் ரம்யா கூறினார்.

இதனிடையே பஸரை அழுத்திய பின்னர் பாடல் தெரியாதவர்களுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கப்பட்டது. அதனால் பாலாஜி இறுதி இடத்தை பிடித்தார். ஷிவானி முதலிடத்தை பெற்றார். தற்போது வரை நான்கு டாஸ்குகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், ரம்யா முதலிடத்தில் உள்ளார். போட்டியாளர்கள் 4 டாஸ்க்குகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம் : ரம்யா - 20, சோம் - 13, ரியோ - 19, கேபி - 7, ஆரி - 17, பாலா - 17, ஷிவானி - 19 ஆகும்.இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் ‘டிக்கெட் டு ஃபினாலே’வின் 5-வது டாஸ்க் நடைபெறுகிறது. அதில், ஒரு பந்தை வளையத்திற்குள் வைத்து சுற்றி கொண்டே இருக்குமாறு பிக்பாஸ் அறிவிக்கிறார். வளையத்தில் இருக்கும் பந்து நின்றுவிட்டாலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ அவர் போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். யார் கடைசி வரை வளைத்ததில் பந்தை சுற்றிக்கொண்டே இருக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

அதன்படி அனைவரும் நிற்க ஒரு மேடை அமைக்கப்பட்டு அதிலிருந்து கீழே இறங்குமாறும் அவ்வப்போது பிக்பாஸ் அறிவிக்கிறார். இந்த டாஸ்கில் ரியோ முதலிடத்தையும், பாலாஜி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதன்படி ரியோவிற்கு மொத்தம் 26 மதிப்பெண்களும், பாலாஜிக்கு 23 மதிப்பெண்களும் கிடைத்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: