பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? ரம்யா பாண்டியன் சகோதரர் சூசகம்

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? ரம்யா பாண்டியன் சகோதரர் சூசகம்

பிக்பாஸ்

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் நீ வெளியில் வந்தால் அதற்கு காரணம் நீ இல்லை என ரம்யா பாண்டியனிடம் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தரும் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் முதல் ஆளாக வந்த நடிகை ஷிவானி நாராயணின் அம்மா, “எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்த? நீ இந்த வீட்டுக்குள் செய்றது வெளியில் யாருக்கும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கியா. எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க. நீ எதுக்கு வந்திருக்க சொல்லு. ஒருத்தன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க” என மிகவும் கோவமாக பேசினார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஷிவானி கதறி அழத் தொடங்கினார். மேலும் இப்படிலாம் இங்க பேசாதீங்க அமைதியாக பேசுங்க என்றார் ஷிவானி. அதற்கு அவரது அம்மா, 'இங்க வந்து நான் பேசுவதால் எதுவும் தெரியப் போவதில்லை. ஏற்கனவே தெரிந்ததால் தான் நான் வந்து பேசுகிறேன். அவன் முன்மொழிந்ததற்கெல்லாம் வழி மொழிஞ்சிட்டு இருக்க. உனக்குன்னு கருத்துகள் இல்லையா. இவன் பின்னாடி சுத்திட்டி இருக்குறது தான் நீயா இருக்குறது என அர்த்தமா.

காலையில் பாடல் போடும் போது நீ ஏன் அவனை எழுப்ப செல்கிறாய்? சொந்தகாரங்க எல்லாரும் பாக்குறாங்க. அப்பா பாத்துட்டு இருக்காங்க. அவர்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க என்றார். மேலும் கிறிஸ்துமஸ் கிஃப்ட் அவனுக்கு ஏண்டி கொடுக்குற. அவன் யாரு கூட பேசுனா என்ன. உனக்கு ஏன் இந்த பொசசிவ் வருது என சராமரியாக விளாசினார். இதனைத் தொடர்ந்து ஷிவானியின் அம்மா மற்ற போட்டியாளர்களுடன் பேசினார். ஆரி நன்றாக விளையாடுவதாகும், ரியோவின் மகள் புகைப்படத்தை பார்த்தேன். அழகாக இருந்தாள் என்றும், ரம்யா, கேபியை எனக்கு பிடிக்கும் என்றும் கூறினார்.

ஆனால் பாலாஜியிடம் பேசவே இல்லை. வெளியே செல்லும் முன்னர், நன்றாக விளையாடு, நல்ல பெண்ணாக இரு என்று ஷிவானியை கட்டியணைத்து முத்தம் கொடுத்து சமாதானம் செய்துவிட்டு சென்றார். பின்னர் என்னிடம் ஷிவானியின் அம்மா பேசி இருந்தால் கூட பரவாயில்லை, எதுவுமே கேட்காமல் போனது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என பாலாஜி, ரம்யா, ஆஜித்திடம் கூறினார். ஷிவானி மீது எந்த தவறும் இல்லை. அவள் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் நல்ல தோழியாக தான் இருந்தார் என கண்கலங்கி கூறினார்.

பின்னர் பாலாஜியை காண அவரது அண்ணன் ரமேஷ் வருகை தந்தார். அவர் அனைவரிடமும் கலகலப்பாக பேசினார் . பின்னர் பாலாஜியிடம் தற்போது வரை நீ சிறப்பாக தான் முடிவுகள் எடுத்துட்டு இருக்க. நீ கப்பு ஜெயிச்சிட்டு வரணும் என அட்வைஸ் கொடுத்தார். முன்பு இருந்ததை போல விளையாடு, வெளியில் எதுவும் நெகடிவாக தெரியவில்லை, நீ ஷிவானியை காதலிக்கவில்லை என எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு சென்றார்.இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் ரம்யா பாண்டியனின் அம்மா மற்றும் சகோதரர் வருகிறார்கள். முதலில் ரம்யமாவின் அம்மா வரும் நிலையில், அவரை மகிழ்ச்சியுடன் கட்டி தழுவிய ரம்யா என்னுடைய பேட்டரி வந்திருக்கு என சிரிப்புடன் கூறுகிறார். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது அவள் அழுகிற டைப் இல்லை என ரம்யமாவின் அம்மா கூற, அதற்கு சோம், மற்றவர்களை அழ வைக்கும் டைப் என கிண்டல் செய்தார்.

அதன் பின் ரம்யா சகோதரர் தனியாக பேசும்போது 'இந்த வாரம் எவிக்‌ஷன் அல்லது டபுள் எவிக்‌ஷன் நடந்து நீ வெளியில் வந்தால் அதற்கு நீ காரணம் இல்லை' என கூறிகிறார். அதை கேட்டதும் 'நான் வெளியில் வரும் நிலைமை இருக்கா' என ரம்யா கேட்கும் காட்சிகள் உள்ளன. இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரம்யா, ஷிவானி, கேபி, சோம் மற்றும் ஆஜித் உள்ளனர். அதில் தற்போதைய நிலவரப்படி ஆஜித் மற்றும் ரம்யா குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். ஒருவேளை டபுள் எவிக்‌ஷன் இருந்தால் ரம்யா வெளியே செல்லும் வாய்ப்புகள் இருப்பதைத் தான் அவரது சகோதரர் சூசகமாக தெரிவித்திருப்பார் என தெரிகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: