கிடைக்குற கேப்ல எல்லாம் இப்படி பண்றாரே... ஆரிக்கு பின்னால் பேசும் ரம்யா - ஷிவானி

கிடைக்குற கேப்ல எல்லாம் இப்படி பண்றாரே... ஆரிக்கு பின்னால் பேசும் ரம்யா - ஷிவானி

ஆரி - ரம்யா

பிக்பாஸ் வீட்டில் வலுவான போட்டியாளராக வலம் வரும் ஆரியை ரம்யா, ஷிவானி இருவரும் இணைந்து குறைபேசத் தொடங்கியுள்ளனர்.

  • Share this:
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா, கேபி, ஷிவானி, ஆஜித் ஆகிய 8 பேர் உள்ளனர். இவர்களில் ஆரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் அவர் நாமினேஷன் லிஸ்டில் வரும் நிலையில் அதிக ஓட்டுகள் பெறுவதால் அவர் வழக்கமாக முதலில் காப்பாற்றப்படுவார். கடந்த வாரம் ரியோ முதலிலும், ஆரி இரண்டாவதாகவும் காப்பாற்றப்பட்டனர்.

இந்த வாரம் வழக்கம் போல ஆரி முதலில் சேவ் செய்யப்பட இந்த வார நிகழ்ச்சியில் காலர் ஆஃப் தி வீக், ஆரிக்கு கால் செய்து பேசினார். ஆரியிடம் பேசும் அந்த காலர், அந்நியன் படத்தில் அம்பி என்ற நல்ல கேரக்டர் வரும். ஆனால் அந்த கேரக்டரை யாருமே விரும்ப மாட்டார்கள். ஏன்னா அவரு எல்லாத்துக்கும் ரூல்ஸ் ரெகுலேஷன்னு பேசிக்கிட்டே இருப்பாரு.

இங்க பிக்பாஸ் வீட்டுல எல்லா ஹவுஸ்மேட்ஸும் சராசரி மனுஷங்களா உலா வரும் போது இணக்கமான சூழல் உங்களுக்கு பாதிக்காதா? அதை ஏன் அதை தொடர்ந்து செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்.

அதற்கு பதில் அளித்த ஆரி, இணக்கம் பண்ணிக்கிறதுக்காக நான் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரல, பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த அன்னைக்கே சொல்லிட்டாரு. இந்த வீட்டுல யாரும் நண்பர்களும் கிடையாது. யாரும் எதிரியும் கிடையாது. எல்லார்க்கிட்டேயும் நான் கேள்வி கேட்பது, எல்லோர் மீதும் நான் குற்றம் வைப்பதற்காக அல்ல. அவர்களை இன்னும் தகுதிப்படுத்துறதுக்கான கேள்வியாதான் நான் பார்க்கிறேன். இதனை ஹவுஸ் மேட்ஸ் , ரசிகர்கள் புரிந்து கொள்ளவார்கள் என நம்புகிறேன் என்றார்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று ரம்யா மற்றும் ஷிவானி தனியாக அமர்ந்து பேசும் காட்சிகள் இரண்டாவது ப்ரமோவில் தெரிகிறது. அதில், ஆரி அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என பண்ணுகிறார். ஆனால் அது ரசிகர்களுக்கு பிடிக்கிறதா, இல்லையா? என எனக்கு சந்தேகம் உள்ளது. நேற்று வந்த தொலைபேசி அழைப்பிலும் அப்படி தான் எனக்கு தோன்றுகிறது. அவரது செயல் பிடிக்கிறது என எனக்கு தோன்றவில்லை என ரம்யா கூறுகிறார்.

ஷிவானி பேசும்போது “சிலவற்றை சரியாக கூறுகிறார். ஆனால் அவருக்கென வரும்போது சுயநலமாக பேசி மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார். அவரை காப்பாற்ற மற்றவர்களை தவறாக காட்டுகிறார்” என ரம்யா பாண்டியனிடம் கூறுகிறார்.கிடைக்கிற கேப்பில் எல்லாம் வந்து தன்னுடைய பிளஸ், மற்றவர்களுடைய மைனஸ் குறித்து பேசுவதால் எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது என ரம்யா பாண்டியன் குறைகூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஓபன் நாமினேஷன் நடைபெறும் போது ஆரி, ஷிவானியை நாமினேட் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: