Bigg Boss 4 Tamil | தீராத மோதல்.. கோபப்படும் அனிதா சம்பத், கடுப்பான ரியோ..

Bigg Boss 4 Tamil | தீராத மோதல்.. கோபப்படும் அனிதா சம்பத், கடுப்பான ரியோ..

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் வீட்டில் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனிதா சம்பத் கோபப்படுவதாக கூறி நடிகர் ரியோ உள்ளிட்ட ஒரு சிலர் கடுப்பில் இருக்கின்றனர்.

  • Share this:
கடந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் தீபாவளி என்பதால் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். எனவே ஹவுஸ்மேட்ஸ் குஷியாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று 'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.
அதில் அர்ச்சனா பாட்டியாக உள்ளார். ஆரி - சுஜித்ரா, ரியோ - நிஷா, சோம் - ரம்யா ஆகியோர் ஜோடிகள். மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவர்களுடைய பிள்ளைகள். இவர்கள் பாட்டியை சந்தோஷப்படுத்தி சொத்தை பெற வேண்டும், ரம்யா - சோம் - கேபி அந்த பத்திரத்தை திருட வேண்டும் என்பது தான் டாஸ்க். இந்த டாஸ்க் நடைபெற்ற நிலையில் அனிதா பேசிக்கொண்டிருக்கும் போது, உனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்காங்க அதைவிட்டுட்டு மத்தவங்க கூட சண்டை போட்டுட்டு இருக்க என்று ரியோ விளையாட்டாக சொல்ல அதை கேட்டு கோபடமடைந்தார் அனிதா.


நான் சண்டைபோடல நீங்கதான் என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க என அனிதா கூற அய்யோ விடு என சொல்லி விட்டு நான் தூங்கிட்டேன் என கூறி படுத்துக்கொண்டார் ரியோ. அப்போது நான் என்ன என்று எக்ஸ்பிளைன் செய்ய வந்தேன், அதற்கு நீங்கள் விடும்மா என்று கூறினால் என்ன அர்த்தம். நான் பாட்டிக்கு (அர்ச்சனா) மட்டும் தான் லாயலாக இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க், மற்றவர்களுக்கு இருக்க வேண்டியதில்லை என்றார் அனிதா.

நான் விளையாட்டாக சொன்னேன், இங்கு இருக்கும் அனைவரிடமும் கேளுங்கள், தவறு என்றால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார் ரியோ. அப்போது குறுக்கிட்ட சோம், அனிதா அவன் விளையாட்டாக தான் செய்தான் என்றார். அதற்கு ரியோ சொன்னது விளையாட்டாக இல்லை, எனக்கு அது வித்தியாசமா இருந்துச்சு, யாரும் என் காலில் விழ வேண்டாம் என்றார் அனிதா. இதனால் கடுப்பான ரியோ படுக்கை அறைக்கு சென்று தனியாக இருந்தார்.

அப்போது அங்கு சென்ற நிஷா நீ விளையாட்டாக கூறியதை அனிதா தவறாக எடுத்து கொண்டதற்கு உன் மேல் தவறில்லை, அதற்கு ஏன் நீ காலில் விழுகிறேன் என்று கூறினாய் என கோவமாக திட்டினார். இதனிடையே சோம் பீரோவில் இருந்த சொத்து பாத்திரத்தை திருடி விட்டார். எதார்த்தமாக பீரோவை திறந்து பார்த்த அர்ச்சனா, அதில் பத்திரம் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்து அதனை அனைவரும் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என கூறிய நிலையில் அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு பத்திரத்தை தேடிய நிகழ்வுகளுடன் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அந்த பத்திரத்தை பாலாஜி கைப்பற்றியுள்ளார். அதனை ரம்யா பார்த்த நிலையில் அவருக்கும் பங்கு உள்ளது கேபி, பாலாஜியிடம் வாதாடுகிறார்.



அப்போது நான் எடுக்கும் போது அவர் பார்த்தால் நான்கு பேர் சேர்ந்து செய்ததற்கு அர்த்தம் கிடையாது. முதலில் பீரோவில் இருந்து பத்திரத்தை எடுத்தது யாருடா, முதலில் அதை சொல்லுங்கடா என கோவமாக பேசுகிறார். அப்போது அங்கிருந்த சோம் நாசுக்காக சிரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சொத்து பத்திரம் யாரிடம் உள்ளதோ அவர் தான் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: