மாறி மாறி குறை சொன்ன பாலாஜி - ஆரி... சாட்டையை சுழற்ற தயாரான கமல்!

மாறி மாறி குறை சொன்ன பாலாஜி - ஆரி... சாட்டையை சுழற்ற தயாரான கமல்!

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் வீட்டில் ஆரியும், பாலாஜியும் அடுக்கடுக்கான புகார்களை கமல்ஹாசன் முன் வைத்திருப்பதாக தெரிகிறது.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுஜித்ரா மற்றும் சுரேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ஜித்தன் ரமேஷ், பாலா, ஆரி, நிஷா, சனம், சோம் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் ஜித்தன் ரமேஷ் வெளியேற வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுகிழமையில் அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற விஷயங்கள் குறித்து கமலஹாசன் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் பாலாஜி - ஆரி இடையேயான பிரச்னை குறித்து விசாரிப்பது இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தெரிகிறது. அதில் பாலாஜி, இரண்டு பேரை ஸ்கெட்ச் போட்டேன், உள்ளே அனுப்பிவிட்டேன் என கூறியதாக ஆரி தெரிவிக்கிறார்.

மேலும் பாலாவிடம் பேசும் போது கையை கட்டிகொண்டு பேசுங்கள், கையை நீட்டி பேசினால் பிரச்னை செய்வார் என்று கூறுகிறார். அப்போது குறுக்கிடும் பாலாஜி, ஆரி நன்கு கதை எழுதுவார். சண்டை நடைபெறும் போது குற்றம் சொல்லி அட்வைஸ் செய்து விட்டு போய்விடுவார் சார் என கமலிடம் தெரிவிக்கிறார். அதற்கு கமல் உங்கள் பிரச்சனையை பின்னர் விவாதிக்கிறேன் என கூற சக போட்டியாளர்கள் சிரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில், நல்லவரா? கெட்டவரா? என சொடக்கு போட்டு வில்லன் யாரு?, ஹீரோ யாரு? என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தன் விளையாட்டை தானே விளையாடுகிறார்களா? இல்லை அன்பால் எய்யப்பட்ட அம்பாய் பாய்கிறார்களா? வினாக்கள் பல, விடைகளை காண்போம் என புதிராக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் இன்று பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: