அர்ச்சனாவின் அம்பு முதல்... கமல் இன்று பேச இருக்கும் பஞ்சாயத்து இதுதான்

அர்ச்சனாவின் அம்பு முதல்... கமல் இன்று பேச இருக்கும் பஞ்சாயத்து இதுதான்

கமல்ஹாசன்

இந்த வாரம் முழுக்க நடந்த பிரச்னைகளில் நல்லது கெட்டதை பேச இருக்கிறார் கமல்ஹாசன்.

  • Share this:
பூந்தமல்லியை அடுத்து நசரத் பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது. இது செம்பரம்பாக்கம் அருகே அமைந்திருக்கிறது. நிவர் புயல் காரணமாக காரணமாக கனமழை பெய்த காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து 53-ம் நாள் இரவு போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் பின் மறுநாள் தான் மீண்டும் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டனர். இந்த காட்சிகள் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின. மேலும் இந்த வாரம் நடைபெற்று வந்த கால் சென்டர் டாஸ்க் அடுத்த வாரத்திற்க்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று பேரை தேர்ந்தெடுக்க வேண்டுமென பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி பாலா, ரம்யா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் இந்த வாரம் முழுவதும் ஈடுபாடு குறைவாக இருந்ததாக ஆரி மற்றும் ரியோ ஆகியோரை தேர்ந்தெடுத்தனர். இதனால் இவர்கள் இருவரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், நல்லவரா? கெட்டவரா? என சொடக்கு போட்டு வில்லன் யாரு?, ஹீரோ யாரு? என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தன் விளையாட்டை தானே விளையாடுகிறார்களா? இல்லை அன்பால் எய்யப்பட்ட அம்பாய் பாய்கிறார்களா? வினாக்கள் பல, விடைகளை காண்போம் என புதிராக பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் இன்று பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: