ரம்யா பாண்டியனை எவிக்ட் செய்ய வந்த பிக் பாஸ் பிரபலம்!

ரம்யா பாண்டியன்

வீட்டுக்குள் சென்று ஒருவரை அழைத்து வர வேண்டும் என கமல் சொல்ல, ‘இது கொஞ்சம் கஷ்டமான வேலை சார்’ என்றார் கவின். ‘அதுக்குத்தான உங்கள கூப்பிட்டிருக்கோம்’ என்ற கமல் அவரை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

 • Share this:
  பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனின் போட்டியாளர் கவின் இந்த சீசனில் பங்கு பெற்றுள்ளார்.

  பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான சோம் சேகர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்த போட்டியாளரை எவிக்ட் செய்யும் நேரம் வந்தது. 4-வது போட்டியாளரை வீட்டிலிருந்து அழைத்து வர, பிக் பாஸ் அரங்கத்திற்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்தார். அவர் வேறு யாரும் அல்ல. கடந்த சீசன் போட்டியாளரான கவின் தான்.

  மேடைக்கு வந்த அவரிடம், தொழில் குறித்து விசாரித்தார் கமல். தான் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்து முடித்திருப்பதாகவும், கொரோனாவால் அதன் வெளியீடு தள்ளிப் போயிருந்த நிலையில், தற்போது திரையரங்குகள் செயல்பட தொடங்கிவிட்டதால், விரைவில் திரைக்கு வரும் என்றார்.

  பின்னர், வீட்டுக்குள் சென்று ஒருவரை அழைத்து வர வேண்டும் என கமல் சொல்ல, ‘இது கொஞ்சம் கஷ்டமான வேலை சார்’ என்றார் கவின். ‘அதுக்குத்தான உங்கள கூப்பிட்டிருக்கோம்’ என்ற கமல் அவரை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

  வீட்டுக்குள் சென்ற கவின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ் உடன் டான்ஸ் ஆடினார். பின்னர் நியூஸ் பேப்பர் கிழித்து ஆங்காங்கே இருக்கும். அதை எல்லாரும் கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ரம்யா பாண்டியனுக்கு பேப்பர் கிடைக்கவில்லை. இதற்காக பிக் பாஸிடம் க்ளூ கேட்டார் ரம்யா. அவருக்கான க்ளூ ஸ்டோர் ரூமில் இருப்பதாக சொன்னார் பிக் பாஸ். அங்கிருந்த பேப்பரில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியேற்றப் படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கவினுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் 5 இறுதிப் போட்டியாளர்களில் 4-வதாக வீட்டை விட்டு வெளியேறினார் ரம்யா!  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: