பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு ஸ்டைலாக தயாரான 5 போட்டியாளர்கள்!

பிக் பாஸ் தமிழ் 4

போட்டியாளர்களின் குடும்பத்தினரும், இந்த சீசனில் வீட்டை விட்டு வெளியேறியவர்களும் நேரடி பார்வையாளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு ஃபைனலிஸ்ட் 5 பேரும் டக்கராக தயாராகியிருக்கிறார்கள்.

  100 நாட்களைக் கடந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி-யின் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து 6 மணி நேரம் ஒளிபரப்பாகிறது. ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா பாண்டியன் என 5 போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் இல்லத்தில் இருக்கிறார்கள். இவர்களில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  இந்த சீசனின் இறுதி நாளுக்கான ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது விஜய் டிவி. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும், இந்த சீசனில் வீட்டை விட்டு வெளியேறியவர்களும் நேரடி பார்வையாளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.  கிராண்ட் ஃபினாலேவை முன்னிட்டு கருப்பு நிறத்தில் க்ளிட்டர் கோட் அணிந்து வந்திருக்கிறார் கமல். இறுதிப் போட்டிக்கு தயாராகி இருக்கும் ரம்யா பாண்டியன், சோமசேகர், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோ ராஜ் ஆகிய 5 பேரும் முதல் 2 ப்ரோமோக்களில் இடம் பெற்றுள்ளனர். அர்ச்சனா மற்றும் சம்யுக்தா நடனமாடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் வின்னரை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் படு ஆர்வமாக இருக்கும் தருணத்தில், விஜய் டிவி-யின் ப்ரோமோக்கள் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: