பிரமாண்டமாக தொடங்கிய பிக் பாஸ் 4 இறுதிப் போட்டி!

பிக் பாஸ் இறுதிப்போட்டி

சும்மா கிழி, வெறித்தனம், வாத்தி கம்மிங் ஆகிய மூன்று மிக்ஸிங் பாடல்களுக்கு அசத்தல் நடனமாடினார் அர்ச்சனா.

 • Share this:
  கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

  கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், ரேகா, ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியில் அர்ச்சனாவும், சுசித்ராவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதில் சுசித்ரா வந்த வேகத்திலேயே அதாவது 21 நாட்களில் எவிக்ட் ஆனார்.

  அதோடு ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத் ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டார். 5 லட்சம் பணத்தோடு சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரியல்லா. தற்போது பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக ஆரி, பாலாஜி, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் இருக்கிறார்கள்.

  இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கியது. இதில் இறுதிப் போட்டியாளர்களின் குடும்பத்தினரும், இந்த சீசனின் மற்ற போட்டியாளர்களும் நேரடி பார்வையாளர்களாக பங்கேற்றனர். அரங்கத்தில் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் நலம் விசாரித்த கமல், பிக் பாஸ் அனுபவம் குறித்தும் வெளியில் சென்றதும் அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும் கேட்டார். தந்தையை இழந்த அனிதா உணர்ச்சி வசப்பட்டபோது, நானும் உங்களுக்கு தந்தை தான் என ஆறுதல் கூறினார் கமல்.

  பின்னர் அகம் டிவி வழியே பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற கமல், போட்டியாளர்களிடம் நலம் விசாரித்தார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் ஸ்டோர் ரூமுக்கு போகச் சொன்ன கமல், அவர்களுக்கான பரிசுகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார் கமல். ரியோவுக்கு ட்ரெக்கிங் கிட், பாலாவுக்கு டம்பெல்ஸ், ரம்யாவுக்கு ஆர்கானிக் விதைகள், சோமுக்கு இசைக்கருவி, ஆரிக்கு பேனா மற்றும் டைரியை அவர் வழங்கினார்.

  Bigg Boss Tamil 4, Bigg Boss Grand Finale, bigg boss vijay tv, bigg boss hotstar

  பரிசுகளை எடுத்துக் கொண்ட போட்டியாளர்கள் அரங்கத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்தினருடன் பேசினார்கள். பின்னர் அர்ச்சனாவின் நடனம் அரங்கேறியது. சும்மா கிழி, வெறித்தனம், வாத்தி கம்மிங் ஆகிய மூன்று மிக்ஸிங் பாடல்களுக்கு அசத்தல் நடனமாடினார் அர்ச்சனா.

  பின்னர் கடந்த சீசனின் டைட்டில் வின்னர் முகென் ராவ் பிக் பாஸ் அரங்கத்திற்கு வந்தார். அவரிடம் பிக் பாஸ் கோப்பையைக் கொடுத்து, போட்டியாளர்களிடம் கொடுத்து பார்க்கச் சொன்னார் பிக் பாஸ். பின்னர் அங்கிருந்து கப்போடு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார் முகென். அவர்களிடம் கப்பை காட்டிய முகென், தன் மூலமாக சில டாஸ்க்குகளை பிக் பாஸ் செய்ய சொன்னதாகக் கூறினார்.

  ஆக்சஸ் கார்டுகளைக் கொடுத்து இதில் யாருடைய கார்டு வேலை செய்கிறதோ, அவர்கள் தன்னுடன் வர வேண்டும் என்றார். வரிசையாக ஒவ்வொருவரும் ஆக்சஸ் செய்ய யாருடைய கார்டும் வேலை செய்யவில்லை. பின்னர் ஒவ்வொருவரையும் மாஸ்க் மாட்டச் செய்து இன்னொரு டாஸ்க்கையும் செய்தார். அப்போதும் யாருடைய பெயரும் வரவில்லை. இதனால் முகென் தங்களை டென்ஷன் படுத்துவதாக படபடத்துப் போனார்கள் இறுதிப் போட்டியாளர்கள் 5 பேரும்.

  சிரித்து சமாளித்த முகென், இப்போது சீரியஸான டாஸ்க், இந்த கார்டில் யாருடையது ஸ்கேன் ஆகிறதோ, அவர்கள் என்னுடன் வரவேண்டும் என்றார். வரிசையாக போட்டியாளர்கள் தங்களுடைய கார்டை ஸ்கேன் செய்தனர். அப்போது, சோமின் கார்டு ஸ்கேன் ஆனதால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆனார். அவரை பிக் பாஸ் அரங்கத்துக்கு அழைத்துச் சென்றார் முகென்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: