பிக்பாஸிலிருந்து ரூ.5 லட்சம் பெற்று வெளியேறிய முக்கிய போட்டியாளர்

பிக்பாஸிலிருந்து ரூ.5 லட்சம் பெற்று வெளியேறிய முக்கிய போட்டியாளர்

பிக்பாஸ்

பிக்பாஸிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

  • Share this:
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் இப்போது ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகிய 6 பேர் மீதமிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

6 பேரில் நடிகர் ஆரிக்கு பார்வையாளர்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து போட்டியிலிருந்து விலக போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த நடிகர் கவின் பிக்பாஸ் கொடுத்த தொகையைப் பெற்று போட்டியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் இந்த சீசனிலும் பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பது இன்று வெளியான ப்ரமோ வீடியோவில் உறுதியாகியுள்ளது. அதில் பிக்பாஸின் கட்டளையை படிக்கும் அர்ச்சனா, ஒவ்வொரு சீசனிலும் இந்த தருணம் பல சுவாரஸ்யமான மற்றும் யாரும் எதிர்பார்க்காத பல நிகழ்வுகளை போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் காண்பித்திருக்கிறது.

உங்களுக்காக பணம் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு ஒலிக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுக்காவிட்டால் அடுத்த ஒலிக்கான (பஸர்) தொகை அனுப்பப்படும். இந்த தொகையை உங்களில் யாராவது எடுக்க முடிவு செய்தால் நீங்கள் அதை எடுத்துக் கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியேறலாம். இனி உங்கள் முடிவு உங்கள் கையில்” என்கிறார்.

பின்னணியில் பொன்மகள் வந்தாள் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க ஆரி பணப்பெட்டியின் பக்கத்தில் நிற்கிறார். மற்ற போட்டியாளர்கள் உற்சாகத்தில் இருக்க ப்ரமோ முடிவடைகிறது. இந்நிலையில் நடிகை கேப்ரியலா ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த கேபி இறுதிச்சுற்றுக்கான டாஸ்க்குகளில் கடுமையாக போராடினார். மேலும் குரூப்பாக சேர்ந்து கொண்டு விளையாடுவதாக கேபி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது அதையும் உடைத்துக் காட்டி தனது தனித்துவத்தை நிரூபித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பணப்பெட்டியுடன் வெளியேறியிருப்பதும் சிறப்பான உத்திதான் என்கின்றனர் பிக்பாஸ் பார்வையாளர்கள்
Published by:Sheik Hanifah
First published: