HOME»NEWS»ENTERTAINMENT»bigg boss tamil 4 finale aari arjunan votes leading 17 lakhs msb

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்

பிக்பாஸ் இறுதிச்சுற்றில் இருக்கும் நடிகர் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்
ஆரி
  • Share this:

தமிழில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 4-வது சீசன் நாளையுடன் முடிவடைய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை வந்த கேப்ரியலா கடைசியாக ரூ.5 லட்சம் பணத்துடன் 13-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

மீதமிருக்கும் சோம் சேகர், ஆரி, பாலாஜி, ரியோராஜ், ரம்யா பாண்டியன் ஆகிய இந்த 5 பேரில் ஒருவர் தான் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனின் வெற்றியாளராவார். இதில் நடிகர் ஆரிக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருவதால் அவர் வெற்றியாளராக அதிக வாய்ப்பிருப்பதாக பிக்பாஸ் பார்வையாளர்கள் கணித்திருக்கின்றனர்.

ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்றுப்படி எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் 16 லட்சட்த்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.



ஆரி டைட்டிலை வென்றால் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெறப்போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சென்று வந்த சுசித்ரா, ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என வெளிப்படையாகவே கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் படிக்க: பிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்

இன்றைய எபிசோடில் பணப்பெட்டியுடன் வெளியேற்றப்பட்ட கேபி கமல்ஹாசன் உடன் பிக்பாஸ் மேடைக்கு வர இருக்கிறார். நாளை மாலை பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதற்கான ஷூட்டிங் நாளை காலை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: