பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் என்ட்ரி - போட்டியாளர்கள் மகிழ்ச்சி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

  • Share this:
அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இந்தமுறை மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 12-வது போட்டியாளராக நேற்று ஷிவானி நாராயணன் வெளியேற்றப்பட்டார். மீதமிருக்கும் ஆரி, பாலாஜி, சோம், கேபி, ரம்யா பாண்டியன், ரியோ ஆகிய 6 பேரில் ஒருவர் டைட்டிலை வெல்வார்.

டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் பார்வையாளர்களிடம் எழுந்திருப்பதோடு, ஆரி வெற்றியாளராக அதிக வாய்ப்புள்ளது என்பதும் அவர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, ரேகா, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். அதை ப்ரமோ வீடியோவாக வெளியிட்டிருக்கிறது விஜய் டிவி. அதில், வீட்டின் சமையலறை, கன்பெஷன் அறை என ஏற்கெனவே எவிக்ட் ஆனவர்கள் வீட்டுக்குள் வருவதைப் பார்த்து ஆரி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடே கொண்டாட்டத்தில் இருக்கிறது.

இதனிடையே 90 நாட்களுக்கும் அதிகமாக வீட்டில் எலியும் பூனையுமாக இருந்த ஆரியும் பாலாஜியும் கடந்த வாரம் முதல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மனம் திறந்து பேசியது இந்த சீசனில் நடந்த முக்கிய மாற்றமாக பார்வையாளர்கள் பார்க்கின்றனர். அதையே நடிகர் கமல்ஹாசனும் வார இறுதியில் பெருமையாக தெரிவித்தார்.பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவதாக முகென் ராவ்வும் வெற்றி வாகை சூடியிருக்கும் நிலையில் 4-வது சீசனில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 
Published by:Sheik Hanifah
First published: