ரியோவிற்கு குரூப்பிஸம் வகுப்பெடுத்த ஆரி... ஷிவானிக்கு ஆதரவாக பாலாஜி

ரியோவிற்கு குரூப்பிஸம் வகுப்பெடுத்த ஆரி... ஷிவானிக்கு ஆதரவாக பாலாஜி

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி 9 போட்டியாளர்களுடன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்று 'B for Ball, C for Catch' என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் அனிதா, ஆரி, பாலா, ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஒரு அணியாகவும், சோம், ரம்யா, கேபி மற்றும் ரியோ மற்றொரு அணியாகவும் இருந்தனர்.

பைப் மூலமாக வரும் பந்தை கேட்ச் பிடிக்கவேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். இந்த டாஸ்க்கில் இதுவரை மூன்று பகுதிகள் முடிவடைந்து உள்ள நிலையில், மூன்று சுற்றுகள் அடிப்படையில் ரேங்கிங் நடைபெற்றது. அதில் ஒன்று முதல் ஒன்பதாவது இடங்கள் முறையே, ரியோ, ரம்யா, சோம், பாலாஜி, ஆரி, அனிதா, ஆஜித், ஷிவானி மற்றும் கேபி இடம் பிடித்தனர்.

நேற்று நடந்த ரேங்கிங் டாஸ்க்கில் ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், டாஸ்க்கின் நான்காவது பகுதி நடைபெற உள்ளது தெரிகிறது. அதில் போட்டியாளர்களுக்கு தங்க நிற பந்துகள் அனுப்பப்பட்டன.

அந்த பந்தை பிடிக்கும் போட்டியாளர்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் போர்டில் இருக்கும் எதாவது ஒரு அட்டையை எடுத்தி அதிலிருக்கும் விஷயத்தை செய்யலாம்.பாலாஜி ஒரு கார்டை எடுத்து தன்னுடைய மதிப்பெண்களை 100 அதிகரித்து கொண்டார்.அதன் பின் ரம்யா எடுத்த கார்டில் யாராவது ஒருவரது மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்க வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது அவர் ரியோவை தேர்வு செய்கிறார். அதேபோல கேபி பாலாஜியின் மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்கிவிட்டார். இதனால் கோபமான பாலாஜி 'கேபி அடுத்து நீ தான் ஜீரோ' எனக் கூறி சவால் விட்டிருக்கிறார்.

இதேபோல இரண்டாவது ப்ரமோவில், டாஸ்க் நிறைவடைந்த பின்னர் இந்த வாரம் முழுவதும் ஈடுபாடு அதிகமாக மற்றும் குறைவாக இருந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் ப்ராசஸ் நடைபெறுகிறது. அதில் பாலாஜி - அனிதா இடையே மோதல் ஏற்படுகிறது. அதில் இந்த வாரம் கேப்டனாக இருந்த பாலாஜி பாகுபாடு காட்டியதாக தெரிவித்தார்.

கேபி, சோம் தூங்கியபோது அதை நேரடியாக கூறிய பாலாஜி, ஷிவானி தூங்கிய போது மட்டும் ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை என அனிதா சம்பத் கேள்வி எழுப்பினார். அப்போது இருவருக்கும் ஒருவர் மாறி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாவது ப்ரோமோவில், ஆரி - ரியோ இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. முன்னதாக ஈடுபாடு குறைவாக இருந்தவர்களில் ரியோ, ஆரியை தேர்வு செய்துள்ளார். அதற்கு விளக்கம் அளிக்கும் ஆரி, குரூப்பிஸம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதனால் கடுப்பான ரியோ, ஆரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் வீட்டில் புதிய பிரச்னைகள் வெடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. பங்களிப்பு குறைவாக இருக்கும் இரண்டு பேர் இன்று கண்ணாடி அறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: