அதிசயம் ஆனால் உண்மை... ஆரியை பாராட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள்

அதிசயம் ஆனால் உண்மை... ஆரியை பாராட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் ஆரியை புகழ்ந்து பேசியுள்ளனர்.

  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த வாரம் வீட்டில் இருக்கும் 7 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு, மீதமிருக்கும் 6 பேரில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

இறுதிச் சுற்றுக்கு நேரடியாக செல்வதற்கான ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் இந்த வாரம் முழுக்க நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெரும் நபர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார் என்பதால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்திறமையுடன் விளையாடி வருகின்றனர். இதுவரை 6 டாஸ்குகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் 7-வது டாஸ்க்கில் வித்தியாசமாக போட்டியாளர்கள் உருண்டு சென்று வளையத்திற்குள் பந்துகளை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரமோவில், 8-வது டாஸ்கில் “போட்டியாளர்கள் ஒவ்வொரு வாக்கியமாக எடுத்து அது யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்துடன் சொல்ல வேண்டும்” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் ஆரி பேசும்போது இது பற்றி விளக்கம் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, ஏனினில் "காலத்தை அழியேல்" என்ற வாக்கியத்தை கொடுத்திருக்கிறீர்கள் என வேடிக்கையாக பேசுகிறார்.

அப்போது 'வாட் எ இம்ப்ரூவ்மென்ட்' என ரம்யா ஆச்சர்யத்துடன் கூற, 'முதல் முறையாக ஆரி ஒரு விஷயத்தை கலகலப்பூட்டும் வகையில் சொல்லி முடித்துவிட்டு வந்திருக்கிறார்', நான் மகிழ்ச்சியடைகிறேன் என ரியோவும், ஆரியை பாராட்டுகிறார். இதன் பின்னர் ஒரே பய அது சோம் பெய என்றார். அது நன்றாக இருக்கிறது என ரம்யா கூறுகிறார். அதனால், “காலத்தை அழியேல்" என்ற வாசகத்தை ஆரி, சோம் சேகருக்கு கொடுத்திருப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

இதனைத் தொடந்து வெளியான மூன்றாவது ப்ரமோவில், ரம்யா பேசுகிறார். அப்போது, “தேசத்துடன் ஒட்டிவாழ்" என்ற வாசகத்தை படித்து இதனை நான் ஆரிக்கு கொடுக்கிறேன் என்கிறார். அதற்காக அவர் கொடுக்கும் விளக்கத்தில் இங்கு இருக்கும் 7 பேரில் 6 பேருடன் ஆரிக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனினும் அவர் ஒட்டி வாழ்ந்திருக்கலாம், அதனை அவர் செய்யவில்லை என கூறுகிறார். இதனை தொடந்து வரும் பாலாஜி, "துன்பம் மறந்து வாழ்" என்ற வாசகத்தை படித்து இதனை நான் ஆரிக்கு கொடுக்கிறேன் என்கிறார். அவர் விளையாடும் முறை எனக்கு பிடிக்கவில்லை. அது என்னுடைய கருத்து. எத்தனை சண்டைகள் வந்தாலும் அன்று மாலையே சரி ஆகி சகஜமாகிவிடுவார் என தெரிவிக்கிறார்.

நேற்று ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளரை பற்றி குறை கூற வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் ஆரி பற்றி குறை கூறினார்கள். அவர் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார் என குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில் இன்று ஆரி குறித்த நல்ல விஷயங்கள் வெளிவருகிறது.குறை கூறும் டாஸ்கில், ஆரி குறைகளை மட்டும் பார்க்காமல் நிறைகளையும் பார்த்து கலகலப்பாக விளையாடினால் நன்றாக இருக்கும் என ரியோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: