வெளியில் போனா ரம்யாவுக்கு விஷ பாட்டில் பட்டம்தான் - பாலாஜி ஓபன் டாக்..

வெளியில் போனா ரம்யாவுக்கு விஷ பாட்டில் பட்டம்தான் - பாலாஜி ஓபன் டாக்..

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் போனால் விஷபாட்டில் பட்டம் தான் உங்களுக்கு கிடைக்கும் என ரம்யா பாண்டியனிடமே வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பாலாஜி.

  • Share this:
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் இப்போது ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகிய 6 பேர் மீதமிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

6 பேரில் நடிகர் ஆரிக்கு பார்வையாளர்களிடையே அதிக ஆதரவு இருப்பதாகவும் எனவே அவர் டைட்டிலை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வாரம் ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்திருப்பதால் வெளியில் இருக்கும் நிலைமையை ஒவ்வொருவரிடமும் கூறி வருகின்றனர். இதனால் இறுதிப் போட்டியில் இருக்கும் போட்டியாளர்கள் ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ரம்யா பாண்டியனிடம் பேசிய பாலாஜி, வெளியில் போனால் உங்களுக்கு விஷ பாட்டில் பட்டம் தான் கொடுப்பார்கள் போல என்று வெளிப்படையாகக் கூற அது எல்லாம் வராது. கவலைப்பட வேண்டாம் என்கிறார் ரம்யா பாண்டியன்.

அப்போது பாலா, எனக்கு எதிரி வெளியில் இல்லை பக்கத்தில் தான் இருக்கிறார் என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது என்கிறார். அப்போது ரம்யா நானா உங்கள் எதிரி என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று தலையாட்டும் பாலாவிடம் அப்படி எல்லாம் இருந்திருக்காது என்று கூறி சமாளிக்கிறார்.

மேலும் படிக்க: மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தம் - விஜய் ரசிகர்கள் விரக்தி

பிக்பாஸ் வீட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் தான் வெளியில் ரம்யாவுக்கு இருக்கும் பெயரையும், பாலாஜியின் உண்மையான எதிரி ரம்யா தான் என்றும் கூறி இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
Published by:Sheik Hanifah
First published: