BiggBoss Tamil 4 | பெற்றோர் குடிப்பழக்கம் பற்றி வேதனைப்பட்ட பிக்பாஸ் பாலாஜி மதுவில் குளிக்கும் சர்ச்சை வீடியோ

பிக்பாஸ் 4 - பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் வீட்டில் தனது பெற்றோர்களின் குடிப்பழக்கம் குறித்து பேசி வேதனை தெரிவித்த பாலாஜி மது அருந்தும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன.

  • Share this:
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிட்டதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடந்த பல சோகக் கதைகளை கூறி கண்ணீர் விட்டனர். அதில் அறந்தாங்கி நிஷாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

    அதேபோல் பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாலாஜி முருகதாஸ் கடந்து வந்த பாதையைக் கேட்டு போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கண் கலங்கினர்.

    இந்நிலையில் பாலாஜி தெரிவித்த கருத்துக்கு நேர் எதிராக அவரே மதுவில் குளிக்கும் வீடியோவையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.



    மேலும் பாலாஜி முருகதாஸின் அட்மின் ஒரு சில சர்ச்சைக்குரிய வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவரது சமூகவலைதளத்தில் இருந்து நீக்கியிருப்பதாக குற்றச்சாட்டும் சோஷியல் மீடியாவில் முன்வைக்கப்பட்டு வருகிறது.



    பாலாஜி முருகதாஸ் குறித்த இந்த சர்ச்சைகள் பிக்பாஸ் பார்வையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

    போட்டி அட்டவணை

    மேலும், இந்த புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றன
    Published by:Sheik Hanifah
    First published: