Home » News » Entertainment » BIGG BOSS TAMIL 4 BALA ASKING QUESTIONS TO AARI GHTA MSB

பிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி

நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால் சென்டர் டாஸ்க் மீண்டும் தொடங்கியுள்ளன.

பிக்பாஸ் வீட்டின் தலைவரான ரமேஷ் - ஆரியிடம் சராமாரியாக கேள்வி எழுப்பும் பாலாஜி
பாலா | ஆரி
  • Share this:
58 நாட்களைக் கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டின் தலைவராக ஜித்தன் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 9-வது வாரத்தின் நாமினேஷனும் நடந்து முடிந்துள்ளது. அதில் ஷிவானி, ஆஜித், அனிதா, ரம்யா பாண்டியன், சனம், நிஷா மற்றும் ஆரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.

இதனிடையே நேற்று பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்காக நடந்த டாஸ்க்கில் நியாயம் இல்லை எனக்கூறி பாலாஜி, ரியோ மற்றும் ஆரியிடம் வாதாடினார் பாலாஜி. அதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில் நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால் சென்டர் டாஸ்க் மீண்டும் தொடங்கியுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கால் சென்டர் டாஸ்க்


வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஊழியர் ஒருவருக்கு கால் செய்து பேசி அவரை டென்ஷன் செய்து அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும். இது தான் டாஸ்க்.

இதுவரை அர்ச்சனா - பாலாஜி, சனம் - சம்யுக்தா, சோம் - கேபி, ரியோ - ஆஜித் , ரம்யா - ரமேஷ் ஆகியோர் கால் சென்டர் டாஸ்கை நிறைவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தொடங்கியிருக்கும் கால் சென்டர் டாஸ்க்கில், பாலாஜி - ஆரிக்கு கால் செய்து பேசுகிறார். நான் உங்கள் ரசிகர். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் என்கிறார் பாலாஜி. மேலும் நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன். எல்லாரும் ஒண்ணா வாங்க சேர்ந்து விளையாடலாம் என்பது தான் எனது விருப்பம். நீங்கள் யாரையும் காலி செய்துவிட்டு விளையாட நினைக்கவில்லையா? என கேள்வி எழுப்பிய பாலாஜி, கெட்டவன்னு சொல்றான் பாருங்க அவனை நம்பலாம். நல்லவன்னு சொல்றான் பாருங்க அவனை கூட நம்பலாம். அனால் நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவனை மட்டும் நம்பவே கூடாது என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த வாரம்  நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க்கில் ஊழியர்களாக இருந்தவர்கள் தற்போது வாடிக்கையாளர்களாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading